எகிப்து முன்னாள் அதிபர் முர்ஸிக்கு மரண தண்டனை!

எகிப்து முன்னாள் அதிபர் முர்ஸிக்கு மரண தண்டனை!

கெய்ரோ:எகிப்தின் முன்னாள் அதிபர் முர்ஸிக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது

எகிப்தின் அதிபராக இருந்தவர் முஹம்மத் முர்ஸி. இவரை பதவியில் இருந்து நீக்கி விட்டு ஸிஸி பதவிக்கு வந்தார்.

ஸிஸி பதவிக்கு வந்த பிறகு இக்வானுல் முஸ்லிமூன் அமைப்பிற்கு தடை விதித்து அந்த அமைப்பைச் சார்ந்தவர்களை ஒடுக்கி வருகிறார். முர்ஸியும் இந்த அமைப்பைச் சார்ந்தவர்.

2011 ஆம் ஆண்டு சிறைக்கைதிகள் தப்பிய வழக்கில் தற்போது முர்ஸிக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே கலகக்காரர்களை தாக்கிய வழக்கில் அவருக்கு 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

முர்ஸி மரண தண்டனையை அடுத்து மூன்று நீதிபதிகள் சுட்டுக் கொலை!

எகிப்தில் மூன்று நீதிபதிகள் மர்ம நபர்களால் சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ள சம்பவத்தை அடுத்து அங்கு பெரும் பதற்றம் நிலவுகிறது.

எகிப்து முன்னாள் அதிபர் முகமது மோர்ஸிக்கும் அவரது ஆதரவாளர்கள் 100 பேருக்கும் கெய்ரோ நீதிமன்றம் நேற்று மரண தண்டனை விதித்தது. 2011-ம் ஆண்டில் மோர்ஸியின் ஆதரவாளர்கள் சுமார் 20 ஆயிரம் பேர் சிறையை உடைத்து வெளியேறிய வழக்கில் அவர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

இந்தத் தீர்ப்பை அடுத்து. மோர்ஸியின் ‘முஸ்லிம் சகோதரர்கள்’ கட்சியினர் ஆங்காங்கே போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் மோர்ஸிக்கு மரண தண்டனை தீர்ப்பு வழங்கப்பட்ட சில மணி நேரத்தில் சினாய் பகுதியில் அல் ஆரிஷ் நகரில் நீதிபதிகள் சென்ற பஸ்ஸை குறிவைத்து மர்ம நபர்கள் துப்பாக்கியால் சுட்டனர். இதில் மூன்று நீதிபதிகள் உயிரிழந்தனர். மேலும் 3 நீதிபதிகள் படுகாயம் அடைந்தனர். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அவர்களின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.

இந்தத் தாக்குதலுக்கு இதுவரை எந்த அமைப்பும் பொறுப்பு ஏற்கவில்லை. எனினும் முர்ஸியின் மரண தண்டனைக்கு பழிவாங்கும் நடவடிக்கையாக அந்நாட்டு தற்போதைய அரசு குற்றம் சாட்டியுள்ளது.

நன்றி: இந்நேரம்.காம்

Leave a comment

Your email address will not be published.


*