நேபாள மக்களுக்கு பிரபல கால்பந்து வீரர் ரூ 50 கோடி நிதியுதவி!

நேபாள மக்களுக்கு பிரபல கால்பந்து வீரர் ரூ 50 கோடி நிதியுதவி!

காத்மண்ட்: பூகம்பத்தால் பாதிக்கப்பட்ட நேபாள மக்களுக்கு பிரபல கால்பந்து வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ ரூ.50 கோடி ரூபாய் நிதியுதவி அளித்துள்ளார்.

உலகையே அதிர்ச்சிக்குள்ளாக்கிய நேபாள பூகம்பத்திற்கு சுமார் 7000 பேர் பலியானார்கள். பலர் படுகாயமடைந்தனர். மேலும் பலர் வீடு வாசல்களை இழந்துள்ளனர்.

இந்த நிலையில் நேபாளத்திற்கு பல்வேறு தரப்பினரும் உதவி புரிந்து வருகின்றனர். இதனைத் தொடர்ந்து புகழ்பெற்ற ரியல் மேட்ரிட் கால்பந்து வீரரான ரொனால்டோ நேபாள நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு 5 மில்லியன் பவுண்டு அதாவது இந்திய மதிப்பில் 50 கோடி ரூபாய் நிதியுதவியாக அளித்துள்ளார்.

குழந்தைகள் நலனுக்காக செயல்பட்டு வரும் ‘சேவ் தி சில்ட்ரன்’ என்ற அமைப்பின் மூலம் இந்த தொகை நேபாள நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சென்று சேரும்.குறிப்பாக நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் நலனுக்கு இந்த தொகை பயன்படுத்தப்படவுள்ளது.

நன்றி: இந்நேரம்.காம்

Leave a comment

Your email address will not be published.


*