எகிப்து முன்னாள் அதிபர் ஹுஸ்னி முபாரக்கிற்கு சிறை!

எகிப்து முன்னாள் அதிபர் ஹுஸ்னி முபாரக்கிற்கு சிறை!

கெய்ரோ: எகிப்து முன்னாள் அதிபர் ஹுஸ்னி முபாரக் மற்றும் அவரது மகன்களுக்கும் சிறைத்தண்டனை வழங்கி அந்நாட்டு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

எகிப்தில் 30 ஆண்டுகளாக சர்வாதிகார ஆட்சி புரிந்து வந்த முன்னாள் அதிபர் ஹுஸ்னி முபாரக் மற்றும் அவரது மகன்கள் ஊழல் குற்றச்சாட்டில் சிக்கினார்கள். இதனைத் தொடர்ந்து எகிப்தில் புரட்சி ஏற்பட்டது. அதில் ஹுஸ்னி முபாரக் பதவியிலிருந்து வீழ்த்தப்பட்டார்.

இந்த நிலையில் இவர்கள் மீதான வழக்கு அந்நாட்டு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இன்று வழக்கை விசாரித்த நீதிபதி, முபாரக்கிற்கு மூன்றாண்டும் அவரது மகன்கள் கமால் முகமது ஹூசைனி முபாரக், மற்றும் அலா ஹூசைனி முபாரக் இருவருக்கும் 4 ஆண்டு சிறைதண்டணை வழங்கி தீர்ப்பளித்தார். தண்டனைக் காலத்தில் பரோலில் வெளிவர முடியாது என்றும் தனது தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளார்.

நன்றி: இந்நேரம்.காம்

Leave a comment

Your email address will not be published.


*