டெல்லியைக் கைப்பற்றிய சுதந்திர போராட்ட வீரர்கள்!

டெல்லியைக் கைப்பற்றிய சுதந்திர போராட்ட வீரர்கள்!

மொகலாய வம்சத்தின் கடைசி வாரிசு பகதூர்ஷா தலைமையில் சுதந்திர போராட்ட வீரர்கள் டெல்லியைக் கைப்பற்றிய நாள் இன்று! ஆண்டு 1857.

சுதந்திர போராட்டத்தில் மொகலாய வம்சத்தின் இறுதி மன்னர் பகதூர்ஷா ஆங்கிலேயர்களால் கைது செய்யப்பட்டு பர்மாவிற்கு கடத்தப்பட்டார். அடக்கம் செய்யபடுவதற்கு இந்திய மண்ணில் இரண்டு கெஜ நிலம் கூட இல்லாமல் போனதே என்ற கண்ணீருடன் அங்கேயே காலமானார்.

16.12.1987 பர்மாவுக்குச் சென்ற இந்தியப் பிரதமர் ராஜுவ் காந்தி பகதூர்ஷாவின் சமாதியில் எழுதப்பட்டிருந்த இரண்டு கெஜம் கவிதையைப் படித்தவர் கண்கலங்கி விட்டார். அங்கு பார்வையாளர் பதிவேட்டில் தனது எண்ணங்களை பதிய செய்தார்.  பகதூர்ஷா இரண்டு கெஜ நிலம் இந்தியாவில் கிடைக்கவில்லை என்பது உண்மை, ஆனால் இன்று நாங்கள் அனுபவிக்கும் சுதந்திரம் உனது தியாகத்தால் உதித்தது. இந்திய நாட்டின் பெயரிலும் புகழிலும் உன் பெயர் கலந்துவிட்டது.

இந்திய சுதந்திரப் போராளிகளின் தானைத் தலைவனாக விளங்கிய தளபதியே உனக்கு வீர அஞ்சலியைச் செலுத்துகிறேன் என்று பதிவு செய்தார் அன்றைய இந்தியப் பிரதமர் ராஜுவ் காந்தி.

இத்தனை முக்கியத்துவ வாய்ந்த இந்த தகவல் அரசுத் தொகுப்பில் அச்சு அடிக்கபடவில்லை. காரணம் இஸ்லாமியர்கள் என்றே ஒரே காரணத்தால் ராஜுவ் காந்தி மறைவுக்கு பின்னர் இது புறக்கணிக்கப்பட்டது.

Yousuf Riaz@Facebook.com

நன்றி: இந்நேரம்.காம்

Leave a comment

Your email address will not be published.


*