திருமணமாகாமல் சேர்ந்து வாழ்பவர்களுக்கு உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!

திருமணமாகாமல் சேர்ந்து வாழ்பவர்களுக்கு உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!

புதுடெல்லி: திருமணமாகாமல் சேர்ந்து வாழ்வதையும் திருமண உறவாகக் கருதுவதாக உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

முதல் மனைவியின் மரணத்திற்கு பின்னர் வேறு ஒரு பெண்ணுடன் 20 ஆண்டு வாழ்ந்த ஒருவரின் உறவினர்கள், அந்த பெண்ணுக்கு சொத்தில் பங்களிப்பதை எதிர்த்து தாக்கல் ஆன வழக்கில் உச்ச நீதிமன்றம் இவ்வாறு தீர்ப்பளித்துள்ளது.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் எம்.ஒய்.இக்பால், அமிதாவாரய் அடங்கிய அமர்வு வழங்கிய தீர்ப்பில், “நீண்ட காலமாக திருமணம் செய்து கொள்ளாமல் சேர்ந்து வாழ்பவர்கள் தம்பதிகளாக அங்கீகரிக்கும் அதே நேரத்தில், அந்த உறவு சட்ட விரோதமானது என குற்றம்சாட்டுபவர்களை அதையும் நிரூபிக்க வேண்டும்.

திருமணம் ஆகாத இருவர் கள்ள உறவு வைத்துக் கொள்வதை விட சேர்ந்து வாழ்வதை தாங்கள் திருமணமாக அங்கீகரிக்கப்படும். அதே சமயம் நீண்ட காலமாக சேர்ந்து வாழ்ந்ததற்கான ஆதாரங்களை சம்பந்தப்பட்டவர்களில் ஒருவர் நீதிமன்றத்தில் நிரூபிக்க வேண்டும் .

மேலும் திருமணம் ஆகாமல் சேர்ந்து வாழும் இருவரில் ஆண் துணைவரின் சொத்தில் பெண்ணுக்கும் பங்கு உண்டு” என்று அந்த தீர்ப்பில் கூறியுள்ளனர்.

Leave a comment

Your email address will not be published.


*