துப்பாக்கிச் சூடு சம்பவம் – சந்திரபாபு நாயுடு பதில்!

துப்பாக்கிச் சூடு சம்பவம் – சந்திரபாபு நாயுடு பதில்!

ஐதராபாத்: ஆந்திர வனப்பகுதியில் தமிழர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக தமிழக முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்துக்கு ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு கடிதம் எழுதியுள்ளார்.

அதில்”வனப்பகுதியில் நடந்த இந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் குறித்து விரைந்து விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளேன்.

இந்த சம்பவம், ஆந்திர காவல்துறை நடத்தியது போலி என்கவுன்டர் என்பது தெரிய வந்தால், அது குறித்து நீதி விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும்” என்று குறிப்பிட்டுள்ளார்.

முன்னதாக தமிழக முதல்வர் சந்திர பாபு நாயுடுவுக்கு இந்த சம்பவம் தொடர்பாக அவசரக் கடிதம் ஒன்றை எழுதியிருந்தார் அதற்கு பதிலளிக்கும் விதமாக இக்கடிதத்தை சந்திர பாபு நாயுடு எழுதியுள்ளார்.

நன்றி: இந்நேரம்.காம்

Leave a comment

Your email address will not be published.


*