முஸ்லிம் ஒருவரை வீட்டை விற்கச் சொன்னதாக இந்து அமைப்புகள் மீது குற்றச்சாட்டு!

பாவ்நகர்: குஜராத்தில் முஸ்லிம் ஒருவரை வீட்டை விற்றுவிட்டு அப்பகுதியை விட்டு வெளியேறுமாறு வற்புறுத்தியதாக விஷ்வ இந்து பரிஷத் மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

குஜராத்தில் உள்ள பாவ்நகர் மாவட்டத்தில் ஜனவரி 2014-ல் முஸ்லிம் வகுப்பைச் சேர்ந்த வர்த்தகர் அலியஸ்கர் ஸவேரி என்பவர் பாவ்நகரில் பங்களா ஒன்றை வாங்கினார். ஆனால் கடந்த டிசம்பரில் தனது இந்த பங்களாவை பூமிதி அசோசியேட்ஸ் என்ற நிறுவனத்துக்கு விற்றுவிட்டார். இந்துக்கள் அதிகமுள்ள இப்பகுதியில் அலியஸ்கர் ஸவேரி வீடு வாங்கியது முதல் அப்பகுதிவாசிகள் அவருக்கு பலவித தொந்தரவுகளை கொடுத்து வந்துள்ளனர். மேலும் நபர் அலியஸ்கரின் வீட்டின் முன்னால் அப்பகுதி இந்துக்கள், வி.எச்.பி. ஆதரவுடன் குழுமி பஜனைகளையும் நடத்தியுள்ளனர். இதனால் அவர் வீட்டை விற்றுவிட்டு அப்பகுதியிலிருந்து வெளீயேறியதாகக் கூறப்படுகிறது.

இதற்கிடையே குஜராத்தில் ‘தொந்தரவு பகுதிகள் சட்டம்’ என்பதை பாவ்நகர் பகுதியில் அமல்படுத்த வி.எச்.பி. முயற்சிகள் மேற்கொண்டு வருகிறது” இந்தச் சட்டம் அசையா சொத்துக்களை வேறு மதத்தைச் சேர்ந்தவர்களுக்கு விற்பதைத் தடுக்கும் சட்டம் ஆகும் என்கிறமை குறிப்பிடத்தக்கது.

 நன்றி: இந்நேரம்.காம்

Leave a comment

Your email address will not be published.


*