உடல் நலம்

நாமெல்லாம் நினைக்கிறது போல ரீஃபைண்ட் ஆயில்னா (Refined oil) சுத்திகரிக்க பட்ட எண்ணெய் மட்டும் இல்லங்க சுத்தமா உயிர் சத்துகளே இல்லாத எண்ணெய். ரீஃபைண்ட் ஆயில் எப்படி தயாரிக்கிறார்கள் தெரியுமா? ஆலையிலிருந்து பெறப்பட்ட எண்ணெயில் காஸ்டிக் சோடாவை சேர்த்து கொதிக்க வைத்து முதலில் அதிலிருந்து சோப்பு எடுக்கிறார்கள். பிறகு …

அவசர உதவிக்கு 108 உதவுகிறது என்றால், மருத்துவ உதவிக்கு மட்டுமல்லாமல் உளவியல் ஆலோசனைக்கும் கைகொடுக்கிறது 104. மருத்துவம் சார்ந்த தகவல், மருத்துவ – உளவியல் ஆலோசனை, சுகாதாரம் சார்ந்த புகார் ஆகியவற்றுக்குத் தொடர்புகொள்ளும் வகையில் 2013 டிசம்பர் மாதம் முதல் தமிழகத்தில் செயல்பட்டு வருகிறது இந்தச் சேவைப் பிரிவு. …

கடந்த ஆகஸ்ட் 17 அன்று விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட நீயா நானா நிகழ்ச்சி மருத்துவர்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியிருக்கிறது. நிகழ்ச்சியின் விவாத பொருள் – மருத்துவர்கள் கமிசன் தொகையை எதிர்பார்த்து தேவையில்லாத பரிசோதனைகளை (Test) நோயாளிகளுக்கு பரிந்துரைக்கின்றனர் என்பது. இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய தொகுப்பாளர் கோபிநாத் தவறான …

இன்றைய தலைமுறைக்கு கஞ்சி என்றால் என்ன என்றே தெரியாது. இட்லி, பொங்கல், பூரி, தோசை எனக் காலை உணவு மாறிவிட்டது. இந்த ஞாயிற்றுக்கிழமை அரைத்த மாவில், அடுத்த ஞாயிற்றுக்கிழமை வரை இட்லி, தோசை சாப்பிட ஆரம்பித்துவிட்டோம். நாம் சாப்பிடும் உணவு ஆரோக்கியமானதா என்கிற கவலை இல்லாமல், வயிற்றை நிரப்புவது …

நிலக்கடலை குறித்த மூட நம்பிக்கைகள் அவ நம்பிக்கைகள் உலகம் முழுவதும் சர்வதேச நிறுவனங்களால் திட்டமிட்டு பரப்பிவிடப்பட்டுள்ளது. நம் நாட்டில் நிலக்கடலை சாகுபடி செய்யப்பட்டிருக்கும் வயலில் அது கொட்டை வைக்கும் பருவம் வரை வயலில் எலிகள் அவ்வளவாக இருக்காது. ஆனால் நிலக்கடலை காய்பிடிக்கும் பருவத்துக்கு பிறகு எலிகள் அளவு கடந்து …

நோய் எதிர்ப்பு சக்தி (Immunity) என்றால் என்ன? நாம் உள்வாங்கும் மூச்சுக்காற்று, அருந்தும் தண்ணீர், உண்ணும் உணவு, தோலில் ஏற்படும் வெடிப்பு இப்படி அனைத்தின் வழியாகவும் நோயை விளைவிக்கும் பாக்டீரியாக்கள், வைரஸ்கள், நுண் கிருமிகள் போன்றவை நமது உடலுக்குள் எப்போதும் நுழையத் தயாராகவே உள்ளன. ஆனால் இவை அனைத்தையும் …

யுவர் அட்டென்ஷன் ப்ளீஸ்? ‘இது அதைவிட பெஸ்ட்… அது இதைவிட பெஸ்ட்…’ என்று டூத்பேஸ்ட் அளவுக்கு வேறு விளம்பரங்கள் ஏதும் இத்தனை விதங்களில் மக்களைக் குழப்புமா என்பது சந்தேகம்தான். ‘எல்லாமே இந்த டூத்பேஸ்ட்டில் இருக்கு’ என்று சொல்வதை நம்பி வாங்கிப் பயன்படுத்த ஆரம்பித்தால், அடுத்த நாளே ‘எல்லாமே இருக்கலாம்… …

இந்தப் பூமியை ஒரு நஞ்சுப்படலம்போல சூழ்ந்திருக்கின்றன பூச்சிக்கொல்லி மருந்துகள். பெயர்தான் ‘பூச்சிக்கொல்லி…’, அவை உண்மையில் அழிப்பது சுற்றுச்சூழலைத்தான். இதில் சமீபத்திய வரவு ஐந்தாம் தலைமுறை பூச்சிக்கொல்லிகள். பூச்சிகளுக்கும் மனிதனுக்கும் நடக்கும் யுத்தத்தில், பூச்சிகளின் தொடர் வெற்றியைச் சகித்துக்கொள்ள முடியாத மனிதன் கண்டுபிடித்த கொடிய நஞ்சு இது. தற்போது தெளிக்கப்படும் …

முதுகுத் தண்டுவடத்தில் ஏற்பட்ட மோசமான காயம் காரணமாக மார்புக்கு கீழே செயலற்றிருந்த ஒருவர் மீண்டும் எழுந்து நடக்க முடிந்திருக்கும் செயலானது மருத்துவ உலகின் மிகப்பெரிய அதிசயமாக வர்ணிக்கப்படுகிறது. பாதிக்கப்பட்டவரின் நாசித்துவாரத்தில் இருக்கும் செல்களை எடுத்து அவரது பாதிக்கப்பட்ட முதுகுத் தண்டுவடப் பகுதியில் செலுத்தி சிகிச்சையளித்ததன் மூலம் அவரது முதுகுத் …

வாரம் ஒரு முறை எண்ணெய் குளியல், மாதம் ஒரு முறை வயிறு சுத்தம் என்பது நம் முன்னோர்கள் பின்பற்றி வந்த ஆரோக்கிய வழிமுறைகள். வயிற்றைச் சுத்தப்படுத்த உண்ணாநோன்பு இருப்பதும், மூலிகைக் கஷாயம் குடிப்பதும், விளக்கெண்ணெய் குடிப்பதும் அல்லது எனிமா எடுத்துக்கொள்வதும் காலங்காலமாகக் கடைப்பிடித்து வந்த பழக்கங்கள். இதனால், உடலில் …

1 2 3 4 11