உபத்திரவத்திலும் பொருமை – பூந்தை ஹாஜா.

உபத்திரவத்திலும் பொருமை – பூந்தை ஹாஜா.

மாட்டிறைச்சி சாப்பிட்டாலும்
மதம் என்று பார்க்காமல்
மாநகரில் பேரிடர் வந்தபோது
ஒடிவந்து உதவி செய்த
உள்ளங்களை பார்த்த
ஈரமில்லாத இதயமும்
அன்று அழுதிருக்கும்.

ஒருநாள் தோன்றிக்
கூக்குரல் இட்டுக்
கடைகளை சூரையாடித்
தாக்குதலையும் நடத்தி
இஸ்லாத்தை அழித்துவிட்டாய்
என்ற தீய நினைப்பால்
தீய நோக்கால் பெரும் பாவம்
சேர்த்ததுதான் மிச்சம்..

பிறர் பொருளை பார்த்து
ஆசைப்படுவது அப்பொருளைக்
கொள்ளையிடுவதற்கு ஓப்பாகும்
என்று இருக்க..
கொள்ளையடித்த உன்னைத்
துன்புறுத்தி கொன்றதற்கு ஒப்பாக
கூறினாலும் மறுப்புச்
சொல்ல ஆளில்லை.

கொலை முதலிய
கொடுமைகளை புரிவோரை
தண்டனை கொடுத்துத்
தக்கவரைக் காப்பது,
உழவன் களையைக் களைந்து
பயிரைக்காப்பதற்குச் சமம்..
என்றான் வள்ளுவன்.

கொலை செய்த குற்றவாழியும்
கொடுமைகளை புரிந்தக்
கொடியவனும் யாராயினும்
தனக்கு இழுக்கு வரும்
என்று கருதாமல் தண்டிப்பதும்தான்
ஒரு செங்கோல் அரசாட்சியாகும்.

வலியவர் எளியவரை வீழ்த்துவதும்
எளியவரை வீழ்த்திய வலியவரை
இறைவன் வீழ்த்துவதும்
கண்கூடாக பார்த்ததுண்டு
இன்னும் எங்களுக்கு
இறுதிவரை பொறுமையை தா
இறைவா என்றே வல்ல
இறைவனிடம் இறையஞ்சுகிறோம். – பூந்தை ஹாஜா

Leave a comment

Your email address will not be published.


*