கோவையில் அனைத்து இஸ்லாமிய அமைப்பினர் ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம்!

கோவையில் அனைத்து இஸ்லாமிய அமைப்பினர் ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம்!

கோவை(23 செப் 2016): கோவையில் பொதுச் சொத்துக்களுக்கு சேதம் விளைவிக்கும் இந்து முன்னணியினர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி அனைத்து இஸ்லாமிய அமைப்பினர் ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கோவையில் இந்து முன்னணியின் கோவை மாநகர மாவட்ட மக்கள் செய்தி தொடர்பாளர் சசிக்குமார் நேற்று இரவு மர்ம நபர்களால் வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.

இந்நிலையில் கோவையில் பதற்றம் நிலவுகிறது. மேலும் இந்து முன்னணியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவதோடு, பொதுச் சொத்துக்களுக்கு சேதம் விளைவித்து வருகின்றனர்.

இதனை கண்டித்தும், பொதுச் சொத்துக்களுக்கு சேதம் விளைவிக்கும் இந்து முன்னணியினர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரியும், அனைத்து இஸ்லாமிய அமைப்பினர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

நன்றி: இந்நேரம்.காம்

Leave a comment

Your email address will not be published.


*