அமீரகத்தில் பேச்சுலர்களின் ஹஜ் பெருநாள் – கவிஞர் பூந்தை ஹாஜா

அமீரகத்தில் பேச்சுலர்களின் ஹஜ் பெருநாள் – கவிஞர் பூந்தை ஹாஜா

அமீரகத்தில் பேச்சுலர்களின் ஹஜ் பெருநாள் – கவிஞர் பூந்தை ஹாஜா

பரிக்கப்பட்டது எங்களது
பாசம் மட்டுமல்ல..
எங்கள் உரிமையும் கூட..
இதை புரிந்தும்
நாங்கள் செய்தது
பெருநாள் தொழுகை முடித்ததும்
இதை மறக்க உறங்கினோம்..

அடுத்த நாள் வந்தது
தாயகத்தில்
பெருநாளும் வந்தது..
காலை முதல் இரவு வரை
நேரம் கிடைக்கும் போதெல்லாம்
ஸ்கைப் போன்ற கண்டுபிடிப்புகள்
எங்கள் கண்முன்னே
எங்கள் குடும்பத்தை கொண்டுவந்தன..

அடுத்த நாள் வழக்கம்போல்
வேலைக்கு சென்றோம்.
அங்கே வேலையில் மனம் லயிக்கவில்லை..

தேவை முடிந்தபின்னும்
தொடர்ந்துகொண்டே இருக்கின்றது
எங்களது தேடல்..
அங்கே… காலமுள் எங்களை பார்த்து..
சிரித்தபடி நகர்ந்துக்கொண்டிருந்தது.

கவிஞர் பூந்தை ஹாஜா

Leave a comment

Your email address will not be published.


*