காவிரியில் கண்ணீர்.. – பூந்தை ஹாஜா.

காவிரியில் கண்ணீர்.. – பூந்தை ஹாஜா.
காவிரியில் கண்ணீர்.. – பூந்தை ஹாஜா.1iஎந்நாட்டவர்க்கு நீர் வேண்டும்…
தண்ணீர் தேவையில்
தன்னிறைவு எப்போது…

தண்ணீர் தரக்கோரி
நாடெங்கும் பதட்டம்..
அணைகளில் நீர் இல்லை
காலியிடங்கள் நிரம்பவில்லை

எங்களுக்கு ஏன் தண்ணீர் இல்லை
என்று கேட்டால்..
அண்டைநாட்டு அரசனுக்கு தொண்டை
அடைத்துக்கொன்டதை உணரமுடிகின்றது.

தேசத்தை ஆளுபவனின் வார்த்தையோ
மனைவிக்கும் அம்மாவுக்கும் நடுவே
உள்ளதை உணரமுடிகின்றது.

மாடுகளின் மூக்கனாங்கயிறு
விவசாயிகளின் தூக்குகயிறாக மாறும் நிலை..

வரண்டுபோன நிலத்தைமட்டுமல்ல
வத்திப்போன வாழ்க்கையை
உயிரூட்ட நீர் வேண்டும்..

மூன்றாம் உலகப்போர் தோன்றினால் அது
தண்ணீருக்காக இருக்கும் என்கின்றனர்..
இருந்தும்..
தேவை முடிந்த பின்னும்
தேடல் தொடர்ந்துக்கொண்டுதான் இருக்கின்றது..

தமிழர்களின் வடிக்கமுடியாத வரிகளால்..
அல்லது கண்ணீரால் அனைகள் நிரம்பாது.

அண்டைநாட்டு மன்னரே..
சேகரிப்பில் உள்ள நீரை திறந்துவிடு..
இல்லை என்றால்..
உச்சநீதிமன்றம் உத்தரவிட்ட
தண்ணீர் கசிவாவது வந்து
எங்கள் அணையை நிரப்பட்டும்.
தூக்குகயிறை கையிலெடுத்தவனுக்கு
கொஞ்சம் மனமாற்றமாவது ஏற்பட
வாய்பிருக்கும் – பூந்தை ஹாஜா

Leave a comment

Your email address will not be published.


*