Home / Uncategorized / பருப்பை உண்டுவிட்டு பதக்கம் வெல்ல முடியாது – கோபி சந்த்!

பருப்பை உண்டுவிட்டு பதக்கம் வெல்ல முடியாது – கோபி சந்த்!

சிந்துவின் பயிற்சியாளரான கோபி சந்த் மிக முக்கியமான ஒரு விவகாரத்தை குறித்து பேசியுள்ளார்.

இது குறித்து நான் தொடர்ந்து சொல்லிக் கொண்டே வந்தாலும், சைவ சித்தாந்த எதிர்ப்பாளராக கருதப் படும் நான் சொல்வதில் பலருக்கு எதிர்மறையான விமர்சனமே தோன்றும். வெற்றி பெற்றவன் பேசும் போது அது கவனத்தில் கொள்ளப்படும் என்பது போல, திரு கோபி சந்த அவர்கள் இந்திய விளையாட்டு துறையில் சைவ உணவு முறை இருப்பதாலும், சைவ பழக்கமானவர்கள் அசைவம் உண்ணாமல் முரண் பிடிப்பதால் உடல் ரீதியாக தேர்வடைவதில் இருக்கிற சிக்கலால், கோபி சந்த அகாடமியில் அசைவம் கட்டாயம், சைவ உணவு பழக்கமான சைனா நேவாலும் பின்னாளில் சிக்கன் எடுத்துக் கொள்ள ஆரம்பித்து இருக்கிறார்.

சைனீஸ் ஆட்டக்காரர்கள் பயிற்சி முறையையும் அவர்களது உணவு பழக்கமும் அவர்களது வெற்றிக்கு முக்கிய பங்கு இருப்பதாக சொல்லப் படுகிறது. ஆனால், இந்தியா மாதிரியான ஒரு அரை வேக்காட்டு சமூகத்தில் எந்த அறிவியலை பேசினாலும் அதை சித்தாந்தத்துக்காக தம் கட்டுபவர்கள் இருக்கிற வரை, இது போன்ற விவகாரங்களை எல்லாம் பேசுவதையே எதிர்ப்பு அரசியலாக பார்க்கிறார்கள். Stamina வுக்கு உணவு முறை கட்டாயம், வீம்புக்கு சைவ விளையாட்டு வீரரை எடுத்துக் காட்டாக யாராவது காமித்தாலும், அவர்கள் அசைவ உணவில் கிடைக்கிற புரத்துக்கு பதில் சைவ புரதத்தை அடைய அதிகம் செலவு செய்ய வேண்டி இருக்கிறது, குக் கிராம ஏழை விளையாட்டு வீரனுக்கு சிக்கனோ, இன்னும் சொல்லப்போனால், ஏழைகளின் cheap protein ஆக இருக்க கூடிய மாட்டு கறியும் அவசியம். கோழி கறி கிடைக்காதவர்களுக்கு புரதம் மாட்டுக்கறி தான், தங்கத்தை குவித்த உலக நாடுகளின் உணவு, டயட்டில் வருவது எல்லாமே மாட்டு கறி தான்.
ஆனால் இதற்கு எதிரான எவ்வளவு பெரிய அரசியல் கடந்த இரண்டு வருடங்களாக அரங்கேறி வருகிறது என்பதை நான் சொல்லி தெரிய வேண்டியில்லை. பேட்மிட்டன் மாதிரியான அதிகமான எனர்ஜி தேவை படுகிற விளையாட்டுக்கும் சரி, அதை விளையாடுவதனாலும் சரி, உட்கொள்கிற புரதம் அதற்கு சமமாக செரிமானம் ஆகி neutral ஆகி விடும். தின்ன சோறு செரிப்பதற்கு முன்னமே திண்ணையில் வெற்றிலை பையோடு அமர்ந்து ஊர்கதை பேசுபவருக்கு தான் இலகுவான உணவு தேவை படுகிறது, பருப்பை தின்னுட்டு உசேன் போல்ட் ஆக முடியாது!

லாஜிக்காக யோசியுங்கள், அசைவ உணவின் அவசியம் உங்களுக்கு தேவை பட்டாலும், படாமல் போனாலும், முந்திரி கொட்ட தனமாக அடுத்தவர் உணவிலோ, அல்லது உங்கள் விருப்ப உணவை பொதுவாக நிறுவவோ முனைவது, சுத்த அயோக்கியத்தனம்.
எதில் அரசியல் செய்வது, எதை பொதுவாக பார்ப்பது என்கிற புத்திசாலி தனம் இல்லாமல் நம்மால் எதிலும் முன்னேற முடியாது!

கூடுதலாக, என் சித்தப்பா புதுவை சாப்ட் பால் கோச்சராக இருக்கிறார், நிறைய மாணர்வர்களை பல்வேறு மாநில போட்டிகளுக்கு அழைத்து சென்று இருக்கிறார், அங்கே வீரர்கள் தங்க வைக்கப் படுவது, அவர்களுக்கான வசதி, அதை கூட இரண்டாம் கட்டமாக தள்ளுங்கள், உணவு பெரும்பாலும் கொடுமையிலும் கொடுமை, தன்னார்வத்தோடு இருக்கிற பணத்தை சேர்த்து புரத உணவுகளை உட்கொண்டு தானாக உடலை தயார் செய்தால் தான் உண்டு என்கிற நிலை தான் இன்றும் இருக்கிறது, பணத்தை தின்னும் ஊழல் அரசியலோடு, உணவுக்கு கூட சமூக அரசியல் இருக்கும் நாடு, கொஞ்சம் கஷ்டம் தான்!
குறைந்தது, இவை எல்லாம் விவாதத்துக்கு உட்படுத்தப் படுகிறதே! அது வரை ஓகே!

நன்றி:வாசுகி பாஸ்கர் (முகநூலிலிருந்து)

நன்றி: இந்நேரம்.காம்

About

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Scroll To Top