என் பள்ளிக்கூடம் – சிறு கதை பூந்தை ஹாஜா..

என் பள்ளிக்கூடம் – சிறு கதை  பூந்தை ஹாஜா..

நான் ஒன்பதாவது படித்துக்கொண்டிருக்கும்போது என் பள்ளித்தோழனும் நானும் தீபாவளியன்று பட்டாசுவாங்குவதற்காக வெடிக்கடைக்கு புறப்பட்டோம்.

அப்போது நாங்கள் போகும் வழியில் உள்ள பள்ளிக்கூடம் உட்புறம் சிலர் பலிங்கு குண்டு வைத்து காசு கட்டி விளையாடிக்கொண்டிருந்தனர்.

என் நண்பன் சொன்னான்.. “வா.. கொஞ்ச நேரம் நாமும் விளையாடுவோம்.” என்றவனிடம் சரி என்று சொல்லி உள்ளே சென்றோம். விளையாடிக்கொண்டிருந்தவர்களுடன் இவனும் சேர்ந்துக்கொண்டான். என் நன்பன் நன்றாக விளையாடகூடியவன். அப்போது அருகில் நான் நின்று வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தேன்.. அந்த கூட்டத்தில் விளையாடிக்கொண்டிருந்த ஒருவர் விளையாட்டை முடித்துக்கொண்டு வீடு திரும்பினார்.

அவர் போகும் வழியில் என் அண்ணனை சந்திக்கும் வாய்பு ஏற்பட்டுள்ளது. என் அண்ணனிடம்.. “உங்க தம்பி காசு வைத்து விளையாடிக்கொண்டிருக்கின்றான்..” என்ற கூறிவிட்டு அவன் சென்றுவிட்டான்.

அதை கேள்விப்பட்டு அங்க வந்த என் அண்ணன் என்னிடம் எந்த வித குறுக்கு விசாரணையும் நடத்தவில்லை.. அந்த கூட்டத்தில் என்னை பார்த்ததும்.. நானும் அவர்களுடன் காசு வைத்து விளையாடு கொண்டிருக்கின்றேன் என்று நினைத்தார்போலும்.. என்னை பளேர் என்று ஒர் அறை.. அறை கிட்டிய மாத்திரத்திலேயே நான் மயங்கி போனேன்..

பள்ளி எதிர்வீட்டில் உள்ள டீச்சர் வீட்டிலிருந்து தண்ணீர் கொண்டுவரப்பட்டு என்ன முகத்தில் தெளித்து என்ன எழவைத்து என் அண்ணன் கூடவே வீட்டிக்கும் அழைத்து சென்றுக்கொண்டிருக்கும்போது……

அண்ணே… “என்னா அங்கேயே பார்த்துக்கொண்டிருக்கீங்க.. கொஞ்சம் முன்னே போங்க.. உங்களுக்கு முன்னாடி நின்னவர்கள் உள்ள போய்ட்டாங்க..” என்றதும் தான் நான் படித்த பள்ளியில் ஓட்டு போடுவதற்காக வரிசையில் நின்றபோது என் பழைய நினைவுகளை அசைப்போட்டது நினைவுக்கு வந்தது. சற்று சுதாரித்து கொண்டு ஓட்டுபோடுவதற்காக பள்ளி உள்ளே சென்றேன். இது நான் படித்த வகுப்பறை. அந்த வகுப்பறையில் நான் படித்த ஞாபகம் மறுபடியும் வந்தது..

வீட்டு பாடம் எழுதாதினால் முட்டி போட்ட இடம்..

பாடம் நடத்திக்கொண்டிருக்கும்போது அருகில் உள்ளவனிடம் பேசிக்கொண்டிருந்தற்காக பள்ளி ஆசிரியர் கையில் வைத்திருக்கும் தடியால் என்னை அடித்தது..

கணக்கு தப்பாபோட்டதற்காக கணக்கு வாத்தியார் என் நோட்டை பக்கத்தில் உள்ள வாழைத்தோப்பில் தூக்கியெறிந்தது..

ஒரு பரிட்சையில், அதே பள்ளியில் ஏன் தெருவில் வசிக்கும் தமிழ் வாத்தியார் நான் பிட் வைத்திருக்கின்றேனா என்று என்னை மட்டும் மற்றும் என் இருக்கையில் தேடி பார்த்தது..

சார்.. இங்கே வாங்க.. என்ன.. அங்கேயே நின்னுட்டீங்க.. உங்க பூத் சிலிப் கொடுங்க.. ஓட்டு ஐடி காட்டுங்க.. என்று அங்கே அமர்ந்திருத்த நபர் கூப்பிட்டதும் தான் நான் சுயநினைவுக்கே வந்தேன். ஒரு வழியாக அங்கே அழகாக சிரித்துக்கொண்டிருந்த என் கட்சி சின்னத்தில் என் ஓட்டை பதிவு செய்துவிட்டு நான் படித்த பள்ளியை விட்டு வெளியே வந்தேன்.. – பூந்தை ஹாஜா

Leave a comment

Your email address will not be published.


*