தொப்பி – சிறுகதை

தொப்பி – சிறுகதை

தொப்பி – சிறுகதை

பூந்தை ஹாஜா

மாப்பிள்ளைக்கு தலைல தொப்பிபோட்டு உட்காரவைங்கப்பா.. – பள்ளிவாசல் நிக்காஹ் நடைபெரும் நேரத்தில் ஒரு குரல் ஒலித்தது.

புது மாப்பிள்ளைக்கு அருகில் அமர்ந்திருந்த பள்ளிவாசலின் இமாம் அவர்கள் உடனே குறிக்கிட்டு..’பரவாயில்லை. அது அவர் விருப்பம்..’ வேண்டாம் என்றால் விட்டுவிடுங்கள்..;’ என்றார்.

இமாமின் பேச்சு அங்கு குழுமியிருந்த பலருக்கு ஆட்சரியத்தை ஏற்பதுத்தியது. ஏன் என்றால் இதே பள்ளிவாசலில் தொப்பி போடாமல் அமர்ந்த புதுமாப்பிள்ளைக்கு வலுக்கட்டாயமாக தொப்பி அணிவித்து அதற்கு பிறகே நிக்காஹ் நடைபெற்றது. இன்று ஏன் இந்த மாற்றம்.. சற்று வித்தியாசமாகவும் பட்டது.

நிக்காஹ் ஒரு வழியாக முடிந்தது. அந்த நிக்காஹ் நடைபெற்ற மஜ்லிஸில் பலரின் சலசலப்பு இந்த தொப்பி பற்றியே இருந்தது.

அதில் ஒருவர் மட்டும் தொப்பி விவரம் பற்றி இமாமிடம் தனியாக கேட்டார்.

ஹஜ்ரத்.. கொஞ்சம் நில்லுங்க.. தொப்பி இல்லாவிட்டால் பரவாயில்லை என்றீர்களே ஏன்.. அனைவரும் குலம்பிபோய்வுள்ளனர் என்றார்..

அதற்கு அந்த ஹஜ்ரத்.. கொஞ்ச காலங்களாகவே இந்த தொப்பி பிரச்சனை விஷ்வரூபம் எடுக்க ஆரம்பித்துள்ளது. அதனால் நிக்காஹ் நடைபெரும் நேரத்தில் இந்த தொப்பி பிரச்சனை வராமல் இருக்க என்ன செய்யவேண்டும் என்ற முடிவினை ஜமாஅத்தினரோடு அமர்ந்து கலந்து பேசினோம்.. திருமணம் என்பது இருமணமும் இணைந்து கூடும் பந்தம். அதில் இரண்டு வீட்டார்களும் இணைந்து ஒன்று கூடி எடுத்தமுடிவு. மாப்பிள்ளையை பெண் வீட்டாருக்கும், பெண்னை மாப்பிள்ளை வீட்டாருக்கும் பிடித்துபோய் இருவரையும் இணைக்கும் பந்தமே இந்த திருமணம். இதில் முறையாக நடத்தி கொடுக்கவேண்டியதே எங்கள் வேலை. இந்த திருமணத்தில் மாப்பிள்ளை மற்றும் பெண் இருவரின் சம்மதம் மிகவும் அவசியம். அதை விட்டு விட்டு மாப்பிள்ளை தொப்பி போடவில்லை என்ற கவணத்தைவிட இரு வீட்டாரின் சந்தோஷமே நமக்கு பெரியது. இதை கடைப்பிடித்தாலே நமக்கு போதுமானது. இன்றைக்கு திருமணம் என்றால் ஆடம்பரத்திலேயே திகைக்கின்றது. பத்திரிக்கையில் ஆரம்பித்து பந்தல்கள், ஊர்வலங்கள், இப்படியே போய்க்கொண்டிருக்கின்றது. கலிமாக்கள் சொல்லிக்கொடுக்கும்போது அதிகமான பேர் அதை சொல்ல கூட தெரியாமல் திணருகின்றனர். தாடி வைப்பது சுன்னத்து. அதையே சுத்தமா வலித்து எடுத்துவிட்டு வருகின்றனர். இதில் தொப்பி என்பது இன்றைக்கு ஒரு பிரச்சனைக்கு எடுத்துக்கொண்டால் மற்ற சுன்னத்துகளையும் நாம் பார்க்கவேண்டியுள்ளது. அதிகமான குறைகளோடு வரும் புதுமாப்பிள்ளைகளிடம் தொப்பி ஒன்றை அதிமுக்கியமான குறையாக எடுத்துக்கொள்ளாமல் விட்டுவிடுவதே சிறந்தது என்ற முடிவினை நான் மட்டும் எடுக்கவில்லை,. நம் ஜமாஅத்தினர் எடுத்த முடிவு..’ ஒரு பிரச்சனையை புதிதா உண்டுபன்னுவதை விட.. சரியான முடிவு சரியான நேரத்தில் எடுப்பதே சிறந்தது. அதுதான் இன்றைக்கு இந்த மாற்றம்.

சரியான முடிவு ஹஜ்ரத்.. அப்ப தொழுகைக்கு என்று ஆரம்பித்தார்…

அந்த சங்கதி அப்புறமா பேசுவோம்.. என்று நடையைகட்டினார் இமாம்.
– ஆக்கம் பூந்தை ஹாஜா

Leave a comment

Your email address will not be published.


*