ஜோர்டானில் மகாத்மா காந்தி பெயரில் சாலை!

ஜோர்டானில் மகாத்மா காந்தி பெயரில் சாலை!

அம்மான்(12 அக்.2015): ஜோர்டானில் மகாத்மா காந்தி பெயரில் சாலை ஒன்றினை குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி திறந்து வைத்தார்.

ஜோர்டானில் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். இந்நிலையில் அந்நாட்டின் தலைநகர் அம்மானில் உள்ள ஒரு சாலைக்கு மகாத்மா காந்தியின் பெயர் சூட்டப்பட்டுள்ளது. இந்த சாலையை குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி திறந்து வைத்தார்.

இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அம்மான் மேயர் இதுகுறித்து கூறுகையில், “இந்தப்பாதை அமைதிக்கான போராட்டத்துடன் தொடர்புடையது என்பதால் இந்தியத் தலைவரின் பெயரை வைக்க முடிவு செய்தோம். மறைந்த அரசர் முதலாம் அப்துல்லா அமைதி வழியில் போராடி மன்னராட்சியிலிருந்து 1946-ல் விடுதலை பெற்றுத் தந்தார். எனவே, காந்தியை எங்கள் இதயத்துடன் மட்டுமல்ல, உலகில் அமைதிக்கான அனைத்துப் போராட்டத்துடனும் அடையாளப்படுத்த விரும்பினோம்” என்று தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி கூறும்போது, “இந்த சாலைக்கு காந்தியின் பெயரை சூட்டிய வகையில், இது சுதந்திரப்போராட்ட வரலாற்றைத் தொடர்புபடுத்துவது மட்டுமல்ல, இந்நகரம் நாகரிகத்தின் தொட்டில் என்ற வகையில், மனித நாகரிகத்தின் முன்னேற்றத்தையும் பிரதிபலிக்கிறது” என்று கூறினார்.

நன்றி: இந்நேரம்.காம்

Leave a comment

Your email address will not be published.


*