பரவும் பன்றிக்காய்ச்சல் – தடுப்பு நடவடிக்கைகள் தீவிரம்!

பரவும் பன்றிக்காய்ச்சல் – தடுப்பு நடவடிக்கைகள் தீவிரம்!

ஐதராபாத்: தெலுங்கானாவில் பரவும் பன்றிக்காய்ச்சலைத் தடுக்க அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருவதாக தெலுங்கானா அரசு தெரிவித்துள்ளது.

பன்றி காய்ச்சல் அறிகுறியுடன் ஐதராபாத் ஆஸ்பத்திரியில் பலர் சிகிச்சைக்காக வந்த வண்ணம் உள்ளனர். கடந்த மாதம் 1-ந்தேதி முதல் இதுவரை 431 பேருக்கு ரத்த பரிசோதனை செய்யப்பட்டதில் 66 பேருக்கு பன்றி காய்ச்சல் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இவர்களுக்கு ஐதராபாத் காந்தி ஆஸ்பத்திரி மற்றும் உஸ்மானியா மருத்துவ மனைகளில் தனிவார்டில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. பன்றி காய்ச்சல் பரவுவதை தடுக்கும் நடவடிக்கையில் தெலுங்கானா அரசு தீவிரமாக இறங்கி உள்ளது.

மேலும் பன்றி காய்ச்சல் தடுப்பு மருந்து போதிய அளவில் இருப்பு இருப்பதாகவும் பொது மக்கள் அச்சப்பட தேவையில்லை என்றும் தெலுங்கானா அரசு அறிவித்துள்ளது.

நன்றி: இந்நேரம்.காம்

Leave a comment

Your email address will not be published.


*