சவூதி:மக்காவில் கிரேன் முறிந்து விழுந்து விபத்து – விசாரணைக்கு உத்தரவு!

சவூதி:மக்காவில் கிரேன் முறிந்து விழுந்து விபத்து – விசாரணைக்கு உத்தரவு!

மக்கா: சவூதி அரேபியாவின் புனித நகரான மக்காவில் கிரேன் முறிந்து விபத்துக்குள்ளானதில் பலர் பலியாகியிருக்கக் கூடும் என அஞ்சப்படுகிறது.

முஸ்லிம்களின் புனித இடம் மக்கா. இங்கு லட்சக்கணக்காண ஹஜ் யாத்ரீகர்கள் அங்கு குவிந்துள்ளனர்.

இந்த நிலையில் வெள்ளிக்கிழமை மாலை அங்கு கடும் மணல் புயல் வீசியது, மேலும் பலத்த மழையும் பெய்தது. அப்போது கட்டுமானப்பணியில் ஈடுபட்டிருந்த கிரேன் சரிந்து விழுந்து விபத்து ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. எனினும் கிரேன் முறிந்து விழுந்ததக்ற்கான காரணம் சரியாக தெரியவில்லை. மேலும்  பலியானோர் எண்ணிக்கை குறித்து சரியான தகவல் இல்லை.

makkah crane3

இதற்கிடையே இந்த விபத்து குறித்து உரிய விசாரணை நடத்த மக்கா கவர்னர் காலித் அல் ஃபைசல் உத்தரவிட்டுள்ளார்.

நன்றி: இந்நேரம்.காம்

Leave a comment

Your email address will not be published.


*