பிரபல புரட்சிகர எழுத்தாளர் மர்மநபர்களால் சுட்டுக் கொலை!

பிரபல புரட்சிகர எழுத்தாளர் மர்மநபர்களால் சுட்டுக் கொலை!

பெங்களூரு: பிரபல புரட்சிகர கன்னட எழுத்தாளரரும், கன்னட பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தருமான எம்.எம்.கல்பர்கி [highlight color=”eg. yellow, black”]…[/highlight] சுட்ட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.

கல்பார்க்கி மூட நம்பிக்கைகளுக்கு எதிராக பல கருத்துக்களை இவர் நீண்ட காலமாக பேசியும் எழுதியும் வந்தார். அண்மையில், அவரது வீட்டிற்கு முன்பாக போராட்டம் நடத்திய [highlight color=”eg. yellow, black”]…[/highlight]அவரது வீட்டில் கற்களை வீசி தாக்குதல் நடத்தினார்கள்.

இந்த நிலையில் கர்நாடகாவில் உள்ள தர்வாத்தில் உள்ள எம்.எம்.கல்பர்கியின் இல்லத்திற்கு வந்த மர்மநபர்கள் சிலர், இன்று காலை அவரது வீட்டின் கதவை தட்டியுள்ளனர். அப்போது கதவை திறந்த கல்பர்கி மீது, அவர்கள் சரமாரியாக துப்பாக்கியால் சுட்டுக் கொன்று விட்டு தப்பிச் சென்றுள்ளனர்.

இதைத்தொடர்ந்து, அவர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். கல்பர்கியை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது தொடர்பாக காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த கொடூர தாக்குதலுக்கு சமூக ஆர்வலர்களும் முற்போக்கு அமைப்பினரும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். இச் சம்பவம் கர்நாடகாவில் பெரும் பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளது.

கல்பார்க்கி 2006-ம் ஆண்டு ‘மார்கா 4’ என்ற இவரது 100 ஆராய்ச்சிக் கட்டுரைகளின் தொகுப்புக்காக, சாகித்ய அகாடமி வழங்கிக் கௌரவிக்கப்பட்டார். மேலும் இவர் பம்பா, ருபதுங்கா உள்ளிட்ட பல்வேறு விருதுகளை பெற்றவர் என்கிறமை குறிப்பிடத்தக்கது.

நன்றி: இந்நேரம்.காம்

Leave a comment

Your email address will not be published.


*