3 மணி நேரத்தில் 2 மாடி வீடு கட்டி சாதனை!

3 மணி நேரத்தில் 2 மாடி வீடு கட்டி சாதனை!

சீனா : வெறும் மூன்றே மணி நேரங்களில் 2 மாடிகள் கொண்ட வீட்டினைக் கட்டி முடித்து சாதனை படைத்துள்ளதுள்ள சீன கட்டுமான நிறுவனம்.

சாதாரணமாக அழகிய வீடு ஒன்று கட்டி முடிக்க குறைந்தது 6 மாதங்களாவது ஆகும். ஆனால் சீனாவில் 3 மணி நேரத்தில் 2 மாடி வீடு கட்டி ஒரு கட்டுமான நிறுவனம் அசத்தியுள்ளது. சான்ஸி மாகாணத்தில் ஸியான் என்ற இடத்தில் இந்த சாதனை படைக்கப்பட்டுள்ளது. இந்த வீட்டை கட்ட கட்டுமான நிறுவனம் ‘3டி பிரிண்டிங்’ தொழில் நுட்பத்தை பயன்படுத்தியுள்ளது.

அதற்கான மாடல்கள் தொழிற்சாலையில் தயாரிக்கப்பட்டன. அதி நவீன தொழில் நுட்ப முறையில் வீடு கட்ட சதுர மீட்டருக்கு ரூ.25 ஆயிரம் முதல் ரூ.30 ஆயிரம் வரை செலவானது.

வீட்டின் வடிவமைப்பு உருவாக்கப்பட்டு ‘கிரேன்’ மூலம் தூக்கி பொருத்தப்பட்டது. இந்த வீடு சமையலறை, படுக்கையறை, ஓய்வு அறை மற்றும் ஹால் உள்ளிட்ட அனைத்து வசதிகளுடன் கட்டப்பட்டுள்ளது.

தொழிற்சாலை மற்றும் விவசாய கழிவு பொருட்கள், கட்டுமான பொருட்களாக பயன்படுத்தப்பட்டன. இது போன்ற வீடு கட்டுவதன் மூலம் போக்குவரத்து, ஆட்கள் கூலி, பொருட்கள் போன்றவற்றின் செலவு குறையும். கால நேரமும் மிச்சமாகும்.

3 மணி நேரத்தில் 2 மாடிகளுடன் கட்டப்பட்ட இந்த வீடு 9 ரிக்டர் அளவில் பூகம்பம் ஏற்பட்டாலும் அதை தாங்க கூடிய வகையில் உருவாக்கப்பட்டுள்ளது என அந்நிறுவனத்தின் பொறியியலாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்நேரம்.காம்

Leave a comment

Your email address will not be published.


*