Home / Uncategorized / ஏர் இந்தியா விமானத்தின் டயர் டமால் – உயிர் தப்பிய 170 பயணிகள்!

ஏர் இந்தியா விமானத்தின் டயர் டமால் – உயிர் தப்பிய 170 பயணிகள்!

ஜம்மு: ஜம்மு காஷ்மீரில் தரையிறங்கிய ஏர் இந்தியா விமானத்தின் டயர் வெடித்தது எனினும் 170 பயணிகள் அதிர்ஷ்ட வசமாக உயிர் தப்பினர்.

டெல்லியிலிருந்து ஜம்முகாஷ்மீர் மாநிலம் ஸ்ரீநகருக்கு ஏர் இந்தியா ஏஐ-821 விமானம் 170 பயணிகளுடன் பறந்தது.

இந்த நிலையில் ஸ்ரீநகரில் உள்ள சர்வதேச விமான நிலையத்தில், விமானம் தரையிறங்கியபோது, அதன் டயர் வெடித்துச் சிதறியது. எனினும், இந்த சம்பவத்தின்போது விமான சிப்பந்திக்கள் உட்பட 170 பேரும் எந்தவித காயமுமின்றி உயிர்தப்பினர். இதனால் விமான ஓடுபாதையில் லேசான சேதம் ஏற்பட்டது.

ஓடுபாதை சேதமடைந்ததால் அங்கு தரையிறங்க வேண்டிய பிற விமானங்கள் ஓடுபாதை சரிசெய்யப்பட்ட பின்பே தரையிறங்க அனுமதிக்கப்பட்டது.

நன்றி: இந்நேரம்.காம்

About

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Scroll To Top