பிரதமர் மோடிக்கு ராம்வீர் என்பவர் கொலை மிரட்டல்!

பிரதமர் மோடிக்கு ராம்வீர் என்பவர் கொலை மிரட்டல்!

புதுடெல்லி: பிரதமர் மோடிக்கு ராம் வீர் என்பவர் வாட்ஸ் அப் மூலம் கொலை மிரட்டல் விடுத்துள்ளமை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 பிரதமர் நரேந்திர மோடி நாளை உத்தரபிரதேச மாநிலம், மதுரா செல்கிறார். அங்குள்ள நாக்லா சந்திரபான் கிராமத்தில் நடக்கும் பா.ஜ.க. அரசின் ஓராண்டு நிறைவு விழா பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு மோடி உரையாற்றுகிறார்.

இந்த நிலையில் மோடி மதுரா வரும்போது கொலை செய்ய்ப்படுவார் என்று காவல்துறை அதிகாரிக்கு வாட்ஸ் அப் மூலம் மிரட்டல் வந்தது.

மிரட்டல் செய்தி அனுப்பியவர், மதுரா மாவட்டம், நவ்லி கிராமத்தை சேர்ந்த ராம்வீர் என்பவர் எனத் தெரியவந்தது. அவர் போலி பெயரில் சிம்கார்டு வாங்கி மிரட்டல் விடுத்திருந்திருந்ததும் தெரியவந்தது. இதையடுத்து, அவரை கைது செய்யும் முயற்சியில் காவல்துறையினர் ஈடுபட்டனர். ஆனால், இதுகுறித்து தகவல் அறிந்ததும் அந்த நபர் ஓடி தலைமறைவாகி விட்டார்.

இதையடுத்து. ராம்வீரின் சகோதரர் லட்சுமணனை காவல்துறையினர் கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், தலைமறைவான ராம்வீரரையும் வலைவீசி தேடி வருகின்றனர்.

நன்றி:இந்நேரம்.காம்

Leave a comment

Your email address will not be published.


*