கிராமப்புற தபால் நிலையங்களில் ஏ.டி.எம்.மையம் – மத்திய அரசு திட்டம்!

கிராமப்புற தபால் நிலையங்களில் ஏ.டி.எம்.மையம் – மத்திய அரசு திட்டம்!

பாட்னா: நாடு முழுவதும் உள்ள கிராமங்களில் உள்ள தபால் நிலையங்களில் ஏ.டி.எம்.மையங்களை அமைக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

இந்த திட்டத்தின் துவக்கவிழா பிகாரில் நடைபெற்றது. அப்போது இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்ட மத்திய தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் திட்டத்தை தொடங்கி வைத்து பேசியபோது, “நாடு முழுவதும் சுமார் 98 கோடி மொபைல் போன்கள் உள்ளன. அவற்றில் சுமார் 30 கோடி பேருக்கு இன்டர்நெட் வசதி உள்ளது. நாட்டில் உள்ள 1.54 லட்சம் தபால் நிலையங்களை டிஜிட்டல் திட்டத்தின் கீழ் இணைக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது” என்றார்.

இந்த தொடக்க விழாவில் பீகார் நிதி அமைச்சர் பைஜேந்திர பிரசாத் யாதவ், பாஜ தலைவர் சுஷில் குமார் மோடி, நந்த் கிஷோர் யாதவ் உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர்.

நன்றி:இந்நேரம்.காம்

Leave a comment

Your email address will not be published.


*