மைக்ரோ சாஃப்டின் இறுதிப் பதிப்பு விண்டோஸ் 10!

மைக்ரோ சாஃப்டின் இறுதிப் பதிப்பு விண்டோஸ் 10!

சிகாகோ: விண்டோஸ் 10க்குப் பிறகு மைக்ரோ சாஃப்ட் புதிய இயங்குதளங்களை உறுவாக்காது என்று மைக்ரோ சாஃப்ட் தெரிவித்துள்ளது.

மைக்ரோசாப்ட்டின் இயங்குதளத்தில்(OS) விண்டோஸ் 10 தான் கடைசி என்ற அறிவிப்பு, டெக்(Technology) உலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அப்படியென்றால் இனி மைக்ரோசாப்ட் இயங்குதளங்களை உருவாக்காதா? என்ற மில்லியன் டாலர் கேள்விக்கு மைக்ரோசாப்ட் நிறுவனம் பதிலளித்துள்ளது.

சமீபத்தில் மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் ‘இக்னைட்’ (Ignite) தொழில் நுட்ப மாநாடு சிகாகோவில் நடைபெற்றது. இந்த மாநாட்டில் கலந்து கொண்டு பேசிய மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் உயர் அதிகாரி ஜெர்ரி நிக்சன், “தற்போது நாங்கள் விண்டோஸ் 10-ஐ வெளியிடுகிறோம். இதுதான் மைக்ரோசாப்ட் இயங்குதளங்களில் கடைசி பதிப்பு(last version). இதற்கடுத்து எந்த இயங்குதளமும் வெளிவராது.” என்று தெரிவித்துள்ளார்.

ஆனால் “விண்டோஸ் 10 க்கு அடுத்து புதுப்புது பதிப்புகளை வெளியிடாமல் விண்டோஸ் 10 இயங்குதளத்தையே தொழில்நுட்ப மாற்றங்களுக்கு ஏற்றபடி அப்டேட் செய்ய இருக்கிறோம்” என்றும் அவர் தெரிவித்தார்.

நன்றி: இந்நேரம்.காம்

Leave a comment

Your email address will not be published.


*