யர்முக் பகுதியில் இனமோதல்களை கைவிடுங்கள்: ஹமாஸ்

யர்முக் பகுதியில் இனமோதல்களை கைவிடுங்கள்: ஹமாஸ்

டமாஸ்கஸ் : சிரியாவில் உள்ள பாலஸ்தினங்களின் யர்மூக் அகதிகள் முகாமில் ஆயுதம் ஏந்தி சண்டையிட்டு வரும் குழுக்கள் அனைவரும் உடனடியாக சண்டையை நிறுத்த வேண்டும் என ஹமாஸ் இயக்கம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

ஹமாஸ் இயக்கத்தின் மூத்த தலைவர் இஸ்மாயில் ஹனியா கூறும் போது,  யர்மூக் முகாமில் நடக்கும் பிரச்சனைகளை மிகவும் உன்னிப்பாக கவனித்து வருவதாகவும், அம்மக்கள் குறித்த ஆழமான கவலைகளையும் கருத்துக்களை தெரிவித்தார். மேலும்,  யர்மூக் மற்றும் சிரியாவின் மற்ற பகுதிகளில் உள்ளவர்கள் மிகவும் ஒற்றுமையாக ஒரே  அணியில் இருக்க வேண்டும், உள்நாட்டு போரிலிருந்து விலகி இருக்க வேண்டும் என்றும் கோரிக்கைகளை முன் வைத்தார்

கடுமையான பாதிப்புக்கு உள்ளான இந்நிலையில் அவர்களை ஆக்கிரமிப்பு செய்தது.  இது ஒரு கீழ்த்தரமான செயல் என்று ஹமாஸ் இயக்கத்தின் அரசியல் குழுவின் உறுப்பினர் இஜாத் அல்ரஷீக் கடுமையாக கண்டனம் தெரிவித்தார்,

கொலை, கொடுமையான பசி, குடிதண்ணீர் பிரச்சனை, நோய், குண்டு வெடிப்புகள்,  போன்ற பல்வேறு இன்னல்களை  ஏற்கனவே அவர்கள் சந்தித்து வருகின்றனர்.  மேலும், அவர் ஆக்கிரமிப்பாளர்களை விரட்டவும், நீண்ட நாள் முற்றுகையை நீக்கவும் சர்வதேச சமுகத்திற்கு அழைப்பு விடுத்துள்ளார்

கடந்த புதன்கிழமையிலிருந்து ஐஎஸ்ஐஎஸ்  படைகள் மற்றும் அல்நுஸ்ரா படைகளும் கடும் போரில் ஈடுபடுகின்றார்கள் .மறுபுறம் சிரியா அதிபர் அசாத்தின்  படைகள் குண்டு மழை பொழிந்து வருகிறது. இது வரை பல்லாயிரக்கணக்கான அப்பாவி பாலஸ்தின அகதிகள் கொல்லப்பட்டுள்ளனர்.

கடந்த நான்கு ஆண்டுகளாக நடந்து வரும் போரில், யர்முக் அகதிகள் முகாமில் 1.5 லட்சம் வரை இருந்த மக்கள் தற்பொழுது 18,000 மக்களாக குறைந்தது உள்ளனர்  பலர் அண்டை நாடுகளுக்கும் சிரியாவின் மற்ற பகுதிகளுக்கும் சென்று விட்டனர்.

2012ஆம் ஆண்டு முதல் யர்மூக் அகதிகள் முகாமிற்குள் உணவு, தண்ணீர், மின்சாரம், மருந்துகள் போன்ற அத்தியாவசிய  பொருட்கள் எதுவும் செல்ல முடியாத அளவிற்கு அசாத்தின்  படைகள் முற்றிலும் தடை செய்துள்ளனர். அம்மக்கள் இலைகளை தின்று தான் உயிர் வாழ்ந்து வருகின்றனர். பலர் பசியால் செத்து மடிந்துள்ளனர் என்றும் செய்திகள் தெரிவிக்கின்றன.

செய்தியாளர்: அபூஷேக் முஹம்மத்

நன்றி: இந்நேரம்.காம்

Leave a comment

Your email address will not be published.


*