மேற்குவங்க மாநிலத்திற்குள் நுழைய பிரவீன் தொகாடியாவிற்குத் தடை!

மேற்குவங்க மாநிலத்திற்குள் நுழைய பிரவீன் தொகாடியாவிற்குத் தடை!

கொல்கத்தா: கர்நாடகா, அஸ்ஸாம் மற்றும் ஒடிஷா மாநிலத்தைத் தொடர்ந்து தற்போது மேற்கு வங்காள மாநிலத்திற்குள்ளும் விஸ்வ ஹிந்து பரிஷத் தலைவர் பிரவீன் தொகாடியா நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மேற்கு வங்க அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், இன்று முதல் விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பின் தலைவர் பிரவீன் தொகாடியா மேற்கு வங்க மாநிலத்திற்குள் நுழைய தடை விதிக்கப்படுவதாகவும், தடையை மீறினால் உடனடியாக கைது செய்யப்படுவார்  என்றும்  அறிவித்துள்ளது. தொடர்ந்து அந்த அறிக்கையில், “தொகாடியாவின் வருகையால் மாநிலத்தில் மதக்கலவரம் மற்றும் பொது அமைதிக்கு குந்தகம் ஏற்படும். எனவே அவர் வருகைக்கு தடைவிதிக்கப் பட்டுள்ளதத” என சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.

வரும் ஏப்ரல் 5- ஆம் தேதி அம்மாநிலத்தின் வடக்கு டின்ஜாபூர் மாவட்டத்திலுள்ள  ராய்கஞ்சில் தொகாடியாவின் பேரணி நடைபெற உள்ள நிலையில் இத்தடை விதிக்கப்பட்டுள்ளதால் மாநிலம் முழுவதும் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

ஏற்கனவே, அம்மாநிலத்தின் பிர்பம் மாவட்டத்தில் கடந்த ஜனவரி 29-ஆம் தேதி விஸ்வ ஹிந்து பரிஷத் அமைப்பு நடத்திய தாய்மதம் திரும்புதல் என்னும் “மதமாற்ற நிகழ்ச்சி”யில் கலந்து கொண்ட பிரவீன் தொகாடியா, ஆத்திரமூட்டும் வகையில் பேசியதை அடுத்து மாநிலஅரசால் அவர்  மீது வழக்கு பதிவு செய்யப்பட்டதுள்ளது என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.

நன்றி: இந்நேரம்.காம்

Leave a comment

Your email address will not be published.


*