நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் பொன்மொழியை நினைவு படுத்தி தமக்கு கிடைத்த அன்பளிப்புகளை அரசிடம் ஒப்படைத்த சவுதி அரேபியாவின் முன்னாள் அமைச்சர்!

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் பொன்மொழியை நினைவு படுத்தி தமக்கு கிடைத்த அன்பளிப்புகளை அரசிடம் ஒப்படைத்த சவுதி அரேபியாவின் முன்னாள் அமைச்சர்!

நபிகள் நாயகம் அவர்கள் ஒரு நபி தோழரை ஸகாத் வசூலிப்பதர்காக அனுப்பி வைத்தனர் அந்த நபி தோழர் அரசின்பிரதி நிதியாக ஸகாத் வசூலிக்கும் பணியை செய்து கொண்டிருக்கும் போது அவருக்கு பலர்களும் அன்பளிப்புகளை வழங்கினர்

ஸகாத்தையும் வசூலித்து கொண்டு தமக்கு கிடைத் அன்புஅளிப்பகளையும் எடுத்து கொண்டு அந்த நபி தோழர் நபிகள் நாயகத்திடம் வந்தார்

வந்தவர் தனக்கு கிடைத்த அன்பளிப்புகளை தனியாகவும் அவர் வசூலித்த ஸகாத் தொகையை தனியாகவும் வைத்து விட்டு இது ஸகாத் தொகை என்றும் இன்னொன்று எனக்கு கிடைத்த அன்பளிப்பு என்றும் கூறினார்

நபிகள் நாயகம் அவருக்கு கிடைத்த அன்பளிப்புகளை அவருக்கு கொடுக்காமல் அதை ஸகாத் தொகையோடு சேர்த்துவிட்டனர்

இதர்கு காரணம் கேட்ட போது நீங்கள் உங்கள் வீட்டில் இருந்திருக்தால் இந்த அன்பளிப்புகள் உங்களை வந்தடைந்திரக்குமா? நீங்கள் ஸகாத் வசூலிக்கும் பொறுப்பில் இருந்ததால் தான் அந்த அன்பளிப்புகளை உங்களுக்கு வழங்கினர் எனவே உங்கள் பதவியை கருத்தில் கொண்டு உங்களுக்கு வழங்க பட்ட அன்பளிப்பு உங்களுக்கு உரியதல்ல அது அரசுக்கு சொந்தமானது என கூறி அதை நபிகள் நாயகம் பொது நிதியில் சேர்த்துவிட்டார்கள் இந்த நபி மொழி புகாரி உட்பட பல நுல்களில் பதிவு செய்ய பட்டுள்ளது

இந்த நபி மொழியை அப்படியே பிரதிபலிக்கும் ஒரு நிகழ்வு சில தினங்களுக்கு முன்பு சவுதி அரேபியாவின் அரசு நிர்வாகத்தில் நடந்தது

2009 ஆம் ஆண்டிலிருந்து சல்மான் மன்னர் ஆகும் வரையிலும் சவுதி அரேபியாவின் நிதி அமைச்சராக இருந்தவர் டாக்டர் ஈஸா

மன்னர் சல்மான் பொறுப்பு ஏற்றதும் அமைச்சரவையில் சில மாற்றங்களை செய்தார் அந்த மாற்றங்களில் ஒன்றாக டாக்டர் ஈஸா அவர்களை நிதி அமைச்சர் பொறுப்பில் இருந்து விடுவித்து வலீத் அவர்களை நிதி அமைச்சராக நியமித்தார்

நிதி அமைச்சர் பொறுப்பிலிருந்து விடுபட்ட டாக்டர் ஈஸா அவர் நிதி அமைச்சராக பணியாற்றிய காலத்தில் அவருக்கு வழங்க பட்ட அன்பளிப்புகள் அனைத்தையும் எடுத்து வந்து இந்த அன்பளிப்புகள் ஈஸா என்ற தனி மனிதனுக்காக வழங்க பட்டதல்ல நான் பதவியில் இருந்த காலத்தில் எனது பதவியை கருத்தில் கொண்டு வழங்க பட்டவை எனவே இவைகள் இஸ்லாமிய மார்க்க விதிகளின் அரசையே சாரும் எனக்கு அதில் உரிமை இல்லை என கூறி பல கோடிகள் மதிப்பு மிக்க அன்பளிப்பகளை அரசிடம் ஒப்படைத்துவிட்டார்

அவரின் இந்த செயல் பலரயும் வியக்க வைத்திருக்கிறது.

நன்றி  : சையது அலி பைஜி.
http://www.vkalathur.in/

Leave a comment

Your email address will not be published.


*