ஒருநாள் போட்டிகளில் அதிக ‘டக்’ அவுட்கள்: கிறிஸ் கெய்லுக்கு 4-வது இடம்
செஞ்சூரியனில் நடைபெற்ற 5-வது ஒருநாள் போட்டியில் மே.இ.தீவுகள் அணி தென் ஆப்பிரிக்காவிடம் தோல்வி அடைந்தது. இதில் அதிரடி வீரர் கிறிஸ் கெய்ல் முதல் பந்திலேயே அவுட் ஆனார்.
தென் ஆப்பிரிக்கா அணி முதலில் பேட் செய்து ஹஷின் ஆம்லா (133 ரன்கள், 105 பந்துகள் 11 பவுண்டரி 6 சிக்சர்) மற்றும் ரூசோ (132 ரன்கள், 98 பந்துகள், 9 பவுண்டரி 8 சிக்சர்கள்), ஆகியோரின் அதிரடியில் நிர்ணயிக்கப்பட்ட 42 ஓவர்களில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 361 ரன்கள் விளாசியது. தொடர்ந்து ஆடிய மே.இ.தீவுகள் அணி 37.4 ஓவர்களில் 230 ரன்களுக்கு ஆல் அவுட் ஆகி தோல்வி தழுவி தொடரை 1-4 என்று இழந்த்து. ஆம்லா தொடர் நாயகனாக அறிவிக்கப்பட்டார்.
இலக்கைத் துரத்திய போது மே.இ.தீவுகள் அதிரடி வீரர் கிறிஸ் கெய்ல் முதல் பந்திலேயே அவுட் ஆகி வெளியேறினார்.
இதன் மூலம் முதல் பந்திலேயே ‘கோல்டன் டக்’ அடித்த மே.இ.தீவுகள் வீரர்கள் பட்டியலில் முதலிடம் வகிக்கிறார். அதாவது 6 முறை அவர் முதல் பந்தில் ஒருநாள் போட்டிகளில் ஆட்டமிழந்துள்ளார். அதாவது நம்பர் 1 முதல் 7ஆம் வரிசை பேட்ஸ்மென்களில் இவர் முதலிடம் வகிக்கிறார். மற்றொரு முன்னாள் மே.இ.தீவுகள் தொடக்க வீரர் டெஸ்மண்ட் ஹெய்ன்ஸ், கீத் ஆர்தர்டன், பிரையன் லாரா ஆகியோர் 5 முறை கோல்டன் டக்கில் வெளியேறியுள்ளனர்.
அதோடு மட்டுமல்ல கிறிஸ் கெய்ல் ஒருநாள் போட்டிகளில் 23-வது முறையாக டக் அவுட் ஆகியுள்ளார். இதில் இவருக்கு உலக அளவில் 4-வது இடம்.
மற்ற அதிரடி வீரர்களான சனத் ஜெயசூரியா 33 முறை ஒருநாள் போட்டிகளில் டக் அவுட் ஆக, ஷாகித் அப்ரீடி 26 முறையும் மகேலா ஜெயவர்தனே 25 முறையும் டக் அவுட் ஆகி முதல் 3 இடங்களில் உள்ளனர்.
இவர்களுக்கு அடுத்தபடியாகவும் இலங்கை வீரர் ரொமேஷ் கலுவிதரன 23 டக்குகளுடன் 5-வது இடத்தில் உள்ளார்.
டாப் வீரர்களின் ஒருநாள் ‘டக்’ விவரம் வருமாறு:
கிப்ஸ்- 22 டக்
யூனிஸ் கான் 21 டக்
இன்சமாம் உல் ஹக் 20
ரிக்கி பாண்டிங் 20
சச்சின் டெண்டுல்கர் 20
நேதன் ஆஸ்ட்ல் 19
ஆடம் கில்கிறிஸ்ட் 19
லாரா 16
யுவராஜ் சிங் 18
சேவாக் 14
திராவிட் 13
கபில்தேவ் 13
thanks to : tamil.thehindu.com
Leave a comment