Home / தெரிந்து கொள்வோம் / மஹிந்த தோற்கவில்லை. தோற்கடிக்கப்பட்டார். எப்படி ? – விரியும் ஏகாதிபத்திய வலைகள் !!

மஹிந்த தோற்கவில்லை. தோற்கடிக்கப்பட்டார். எப்படி ? – விரியும் ஏகாதிபத்திய வலைகள் !!

இலங்கையில் சீன ஏன் அளவு கடந்த இன்ரஸ்ட் காட்டுகிறது. அமெரிக்க எதற்காக இலங்கையை தனது ஆதிக்கத்தினுள் கொண்டுவ வர முனைகிறது என்ற கேள்விக்கான விடையை இலங்கை அதிபர் தேர்தல் காலத்தில் பேசுவது பொருந்தும் என நினைக்கிறேன்.

இலங்கையில் நடந்துள்ள ஆட்சி மாற்றம் என்பது அமெரிக்காவின் “இந்தியன் சப்கொன்டினன்டல் டெரடரி ஒகுபய் புரஜக்டின்” ஒரு கட்டம் என்பதை ஆழமாக அவதானித்தால் நாம் புரிந்து கொள்ள முடியும். சீன இராணுவ ஆதிக்கம், அதன் “இந்தியன் ஓஷன் சப்மெரீன் பிளேன்” போன்றவற்றை தடுப்பது மட்டுமல்லாமல் இன்னொரு பிரதான நலனையும் கொண்டதாக உள்ளது. இந்து சமுத்திரத்தின் கடற்பாதையில் ஒரு வருடத்திற்கு 4000 எண்ணை கப்பல்கள் பயணிக்கின்றன.

இந்த கடற்பாதைக்கு அருகில் இலங்கை அமைந்துள்ளது. இதனை தனது ஆதிக்கத்தின் கீழ் கொண்டு வந்தால் சீனாவின் இராணுவத்திற்கும், தொழிற்சாலைகளிற்குமான எண்ணை விநியோகத்தை தடுக்கும் வல்லமையை பெற்று விடலாம். இது அமெரிக்காவின் நீண்ட நாள் கனவு. அந்த கனவை நிறைவேற்ற முதலில் இந்தியாவில் நரேந்திர மோடியை ஆட்சியில் அமர்த்திய அமெரிக்கா இப்போது மைத்திரிபால என்ற பொம்மை அரசை இலங்கையில் நிறுவியுள்ளது. தேசிய அரசியலில் மைத்திரிபால ஸ்ரீசேன அதிகாரமிக்கவராக இருந்தாலும் சர்வதேச அரசியலில் அவர் ஏகாதிபத்தியங்களின் பப்பெட்டாக உருவாக்கப்பட்டுள்ளார். வடக்கு கிழக்கு மாகாண தமிழ் பேசம் வோட்டுக்கள் தான் வெற்றியின் காரணம் என்பது வெறும் புள்ளிவிபர தரவுகள் மட்டுமே.

மக்கள் பலமிக்க, கிராமப்புற சிங்களவர்களின் இதய நாயகனான மகிந்த இராஜபக்ஷவை மைத்திரியால் இலகுவில் வீழ்த்த முடியாது. அவரது 51 இலட்சம் வாக்குககளில் சுமார் 40 இலட்சம் பொள்த்த வாக்குகளை அவர் பக்கம் சாய்த்த பெருமை அமெரிக்காவின் இராஜதந்திரத்தையே சாரும். ரணில் விக்கிரமசிங்க, சம்பிக்க ரணவக்க, சந்திரிக்கா பண்டாரநாயக்க, மங்கள சமரவீர, இரா. சம்மந்தன் போன்ற பிரமாண்ட அமெரிக்க வலையமைப்பின் செயற்பாடு இது. அது மட்டுமல்லாமல் பசில் இராஜபக்ஷவிற்கும் அரசு தோற்க வேண்டியதன் அவசியம் பற்றிய அழுத்தம் வழங்கபட்டிருந்தது. மஹிந்த தோற்கவில்லை. தோற்கடிக்கப்பட்டுள்ளார். ஏகாதிபத்திய நலன்களிற்காக. இந்த உண்மையை நீங்கள் ஜீரணிப்பது கடினம் என்பது எனக்கு தெரியும்.

எதிர்வரும் காலங்கள் உங்களிற்கு அதனை நிச்சயம் உண்மைப்படுத்தும். மக்களின் அரசு மீதான வெறுப்பை, அவர்கள் நாடிய ஆட்சி மாற்றத்தை அமெரிக்கா சரியான தருணத்தில் சரியாக இந்திய உதவியுடன் செயற்படுத்தியுள்ளது. இராஜபக்ஷ, மீண்டும் தேர்வாகும் நம்பிக்கையுடன் நவம்பர் 20 இல் தேர்தலுக்குஅழைப்பு விடுத்தார். அதற்கு பதிலாக, தனது அமைச்சரவையில் சிரேஷ்டஅமைச்சரும் அவரது ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் (ஸ்ரீலசுக) பொதுச்செயலாளருமான சிறிசேனவின் வெளியேற்றத்தை எதிர்கொண்டார். மைத்திரி போட்டியிட முன்வந்த அடுத்த கணமே உடனடியாகஅவரை பிரதான எதிர்க் கட்சியான அமெரிக்க-சார்பு ஐக்கிய தேசிய கட்சி (UNP)ஆதரித்தது. இராஜபக்ஷவை சிறிசேன கைவிட்டமை, வாஷிங்டனுடன் நெருக்கமான உறவுகளை கொண்டுள்ள முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க மற்றும் யூஎன்பீ தலைவர் ரணில் விக்கிரமசிங்கவாலும் முன்கூட்டியேதயார்செய்யப்பட்டது. பேரினவாத ஜாதிக ஹெல உறுமய (JHU), ஸ்ரீலங்காமுஸ்லீம் காங்கிரஸ் (SLMC) மற்றும் அகில இலங்கை முஸ்லீம் காங்கிரஸ் உட்படஇராஜபக்ஷவின் ஆளும் கூட்டணியில் பல முக்கிய உறுப்பினர்களும்,அரசாங்கத்திடம் இருந்து முறித்துக் கொண்டு, எதிர்க்கட்சியில்இணைந்துகொண்டன. பிரதான தமிழ் முதலாளித்துவக் கட்சியான தமிழ் தேசியகூட்டமைப்பு (TNA), தொழிற்சங்கங்கள், பேராசிரியர்கள், கலைஞர்கள், மற்றும்பல்வேறு போலி இடது மத்திய தர வர்க்க அமைப்புக்களும் சிறிசேனவைஅங்கீகரித்தன. இந்த சக்திகள் சிறிசேன பின்னால் அணிதிரண்டதும் தேர்தல் முடிவும் கூட திரைக்குப் பின்னாலான ஒபாமா நிர்வாகத்தின் தலையீட்டின் விளைவே ஆகும்.

இராணுவ உறவுகளை விரிவாக்குவது உள்ளிட்ட, அவரது அரசாங்கம் சீனாவுடன்உருவாக்கிக்கொண்டுள்ள நெருக்கமான உறவுகளில் இருந்து விலக்கி, இலங்கை வெளியுறவு கொள்கையை மாற்றும் பொருட்டு இராஜபக்ஷஅகற்றப்பட்ட வேண்டும் என்று வாஷிங்டனில் முடிவெடுக்கப்பட்டுள்ளது. ஆசியபசிபிக் பிராந்தியம் முழுவதும், பெய்ஜிங்கின் செல்வாக்கை கீழறுப்பதற்காகவும் சீனாவிற்கு எதிரான யுத்தத்தை தயார் செய்யவும் ஒரு ஒருங்கிணைந்த இராஜதந்திர, பொருளாதார மற்றும் இராணுவ தாக்குதலுக்கு சமமான நடவடிக்கையை குறிக்கும், அமெரிக்காவின் “ஆசியாவில் முன்னிலை” கொள்கையில் இருந்தே இந்த தலையீடு நேரடியாக ஊற்றெடுக்கிறது. சிறிசேனவும் அவரது கூட்டணியும் இராஜபக்ஷவின் ஜனாதிபதி முறையின்சர்வாதிகார மற்றும் வேண்டியவர்களுக்கு சலுகை செய்யும் பண்பை தூக்கிப் பிடிப்பதன் மூலம் தமது அமெரிக்க சார்பு நிகழ்ச்சி நிரலை மூடிமறைக்கின்றனர்.”சர்வாதிகாரத்திற்கு எதிரான ஜனநாயகத்திற்கான போராடம்,” என்பதேஅவர்களின் பிரதான முழக்கமாக இருந்தது. எவ்வாறெனினும், சிறிசேன, சீனமுதலீடுகளின் அளவை கண்டித்து, வாஷிங்டனுடனான தனது அணிசேர்வைதெளிவுபடுத்திய அதேவேளை, யூஎன்பீ இராஜபக்ஷவை இலங்கையை”சீனாவின் செயற்கைக்கோளுக்குள்” திருப்பியுள்ளதாக கண்டனம் செய்தது.

வெளியேற்றத்தை இராஜபக்ஷ வெளிப்படையாக சாந்தகுணமுள்ளவராகஏற்றுக்கொண்டமை, தேர்தலானது எந்தளவுக்கு வாஷிங்டனின் நெருங்கியகண்காணிப்பின் கீழ் இடம்பெற்றுள்ளது என்பதை பிரதிபலிக்கின்றது. வாக்களிப்பு தொடங்குவதற்கு சில மணிநேரம் முன்னர், அமெரிக்க வெளிவிவகாரச் செயலர் ஜோன் கெர்ரி பகிரங்கமாக இராஜபக்ஷவை தொடர்புகொண்டு, “ஜனவரி8 தேர்தல்கள் வன்முறை மற்றும் மிரட்டல் இன்றி இடம்பெறுவதைஉறுதிசெய்வது அரசாங்கத்தின் பொறுப்பாகும் மற்றும் வாக்கு எண்ணும்நடவடிக்கை நம்பத்தகுந்ததாகவும் வெளிப்படையானதாகவும் மேற்கொள்ளப்பட வேண்டும்” என்று சுட்டிக்காட்டியுள்ளார். வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் ஜேன் சாகி, ஒபாமா நிர்வாகம்”நிலைமையை தொடர்ந்து கண்காணிக்கும்,” என்று பத்திரிகையாளர்களிடம்கூறினார்.

அவர், “மோசடி அல்லது வன்முறை தொடர்பான எந்தவொருகுற்றச்சாட்டு தொடர்பாகவும் வெளிப்படையான மற்றும் நம்பகமானவிசாரணையை உறுதி செய்ய வேண்டும்”, என இலங்கை அரசாங்கத்துக்குஅழைப்புவிட்டிருந்தார். தோல்வியை ஏற்றுக்கொள்ளுங்கள் அல்லது மோசடி தேர்தல் என வலியுறுத்தும்அமெரிக்கத் தலைமையிலான ஒரு கருத்தொருமித்த பிரச்சாரத்தை எதிர்கொள்ளத் தயாராக வேண்டும் என்ற செய்தி, இலங்கை ஆளும் உயரடுக்கில்இராஜபக்ஷ மற்றும் அவரது ஆதரவாளர்கள், இராணுவம் மற்றும் அரசாங்கஅமைப்புகளுக்கு தெளிவாகியிருக்க கூடும். இலங்கையில் அமெரிக்க சார்புமாற்றுக் கொள்கைக்கான மையத்தின் பாக்கியசோதி சரவணமுத்து, நியூ யோர்க்டைம்ஸிடம் கூறியதாவது: “அவர் [இராஜபக்ஷ] சுவரிலேயே எழுதப்பட்டுள்ளதை கண்டுள்ளார் என்று நான் நினைக்கிறேன்… அரச எந்திரத்துக்குள் உள்ள அவரதுபிரதிநிதிகள், ‘நாங்கள் மக்கள் விருப்பத்தை நிராகரிக்கப் போவதில்லை” என்று அவரிடம் சொல்லியிருக்கக் கூடும்.” லண்டனைத் தளமாகக் கொண்ட பைனான்சியல் டைம்ஸ், தேர்தலில் யார் வெற்றிபெற்றாலும் “வெற்றியின் இடைவெளி குறுகியதாகவே இருக்கும், வாக்கு மோசடி மற்றும் ஏனைய தேர்தல் தொடர்பான முறைகேடுகள்முன்னிலைப்படுத்தும் சாத்தியங்களைக் கொண்டிருக்கும் –எதிர்க்கட்சி மற்றும் அரசாங்க ஆதரவாளர்களுக்கும் இடையே வன்முறைகளுக்கான அச்சுறுத்தலைக் கொண்டிருக்கும்,” என்று நேற்று கருத்து தெரிவித்திருந்தது. இந்த கருத்து, சிறிசேன வெற்றி பெறாவிட்டால், தேர்தல் வன்முறைகள் மற்றும் தேர்தல்மோசடி சம்பந்தமான ஒரு எதிர்ப்பு பிரச்சாரத்துக்கான ஒரு தளத்தை தயார் செய்வதை நோக்கமாகக் கொண்டிருந்தது. அமெரிக்க நிதிய உயரடுக்கின் ஒரு ஊதுகுழலான புளூம்பேர்க், அமெரிக்க-சீனஅழுத்தங்கள் தொடர்பில் இலங்கையின் நிலை பற்றி நேற்று வெளிப்படையாகசுட்டிக்காட்டியது.

“இலங்கை தேர்தலில் இந்திய பெருங்கடல் செல்வாக்கு ஆபத்தில் உள்ளது,” என்ற தலைப்பிலான ஒரு விமர்சனத்தில், அதுசுட்டிக்காட்டியதாவது: “இலங்கையின் ஜனாதிபதித் தேர்தலின் நாளைய முடிவை எதிர்பார்த்திருக்கும் அனைத்து உலக தலைவர்களிலும், அதிக பணயத்தில் இருப்பவர் சீன ஜனாதிபதி ஷீ ஜின்பிங் ஆவார்.” அமெரிக்கா மற்றும் அதன் ஐரோப்பிய நட்பு நாடுகள் கொடுக்கும் கடன்களின் ஒன்றிணைந்த 211 மில்லியன் டாலர்களுடன் ஒப்பிடும்போது இலங்கைக்கு சீனஅரசாங்கம் கொடுக்கும் கடன் 490 மில்லியன் அமெரிக்க டாலர்கள் வரை, கடந்தபத்தாண்டுகளில் 50 மடங்கு அதிகரித்துள்ளது என்று புளூம்பேர்க் அறிக்கை கூறுகிறது. இலங்கையிலான ஏனைய சீன முதலீடுகள் இதே காலத்தில் 4பில்லியன் டாலர்களையும் தாண்டி அதிகரித்துள்ளது. ஜனாதிபதித் தேர்தலில் இந்தியா வெளிப்படையாக கருத்து கூறாவிட்டாலும், அதுஇலங்கையையும் தனது செல்வாக்கு மண்டலத்தில் ஒன்றாக கருதுவதோடு சீனாவின் வளர்ந்து வரும் செல்வாக்கு பற்றி மீண்டும் மீண்டும் கவலைதெரிவித்துள்ளது. இந்திய வெளியுறவு அமைச்சு, இலங்கைக்கு ஜனாதிபதி ஷீசென்றிருந்தபோது, கொழும்பு துறைமுகத்தில் சீன நீர்மூழ்கி கப்பல்கள்தரிப்பதைப் பற்றி கடந்த செப்டம்பர் மாதம் கண்டனம் தெரிவித்திருந்தது. அதுவழக்கமாக இடம்பெறுவதோடு அதனால் இந்தியாவிற்கு எந்த பாதுகாப்புஅச்சுறுத்தலும் இல்லை என்று கொழும்பும் பெய்ஜிங்கும் அறிவித்திருந்தன. இலங்கையானது ஆண்டுக்கு சுமார் 4,000 எண்ணெய் கப்பல்களால் பயன்படுத்தப்படும் இந்து சமுத்திரத்தின் முக்கிய கடல் பாதைக்கு அருகில் மூலோபாயரீதியாக அமைந்துள்ளது.

அமெரிக்கா மற்றும் இந்தியா போன்றஅதன் நட்பு நாடுகள் அத்தகைய கடல் பாதைகளை கட்டுப்படுத்துவதன் மூலம்,மத்திய கிழக்கு மற்றும் ஆபிரிக்காவில் இருந்து எண்ணெய் மற்றும் பிற சக்திவழங்களை இறக்குமதி செய்வதிலிருந்து சீனாவின் இயலுமையைத்தடுக்கலாம் என்று வாஷிங்டன் தீர்மானித்துள்ளது. இலங்கை ஜனாதிபதி தேர்தலில் ஆட்சி மாற்றத்திற்கான அமெரிக்கத்தலையீடானது இந்த பரிசீலனைகளுடன் பிணைந்துள்ளதுடன், தீவில்மட்டுமன்றி தெற்காசியா மற்றும் சர்வதேச அளவிலும் தொழிலாள வர்க்கத்திற்குகடுமையான ஆபத்துக்களை முன்கொணர்கின்றது. அமெரிக்க “முன்னிலை”கொள்கையுடனான சிறிசேன ஜனாதிபதி பதவியின் அணிசேர்வு, ஆசியாமுழுவதும் புவிசார் அரசியல் பதட்டங்களை அதிகரிப்பதோடு போர் உந்துதலையும் தீவிரப்படுத்துகிறது.

thanks to : http://khaibarthalam.blogspot.in/

About admin_igc_Javith

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Scroll To Top