Home / தெரிந்து கொள்வோம் / தென்-யெமனில் அமெரிக்கா நிகழ்த்திய தோல்வியில் முடிந்த ஒப்பரேஷன் ….!!

தென்-யெமனில் அமெரிக்கா நிகழ்த்திய தோல்வியில் முடிந்த ஒப்பரேஷன் ….!!

72 மணி நேர அவகாசம். தீவிரவாதிகள் கரங்களில் அமெரிக்க பிரஜையின் உயிர். காப்பாற்றினால் இன்னொரு வருடத்திற்கு அமெரிக்கர்களிற்கு அதை சொல்லியே அரசியல் செய்யலாம். மாறாக அவர் கொல்லப்பட்டால் அதே அமெரிக்கர்கள் கையாளாகாத அரசு என விமர்சனம் செய்வர்.

இருப்பது இரண்டு ஒப்சன்கள். ஒன்று தீவிரவாதிகளின் டிமான்ட்ஸை ஏற்பது. அது அரசியல் தற்கொலைக்கு சமனானது. மற்றையது ஒரு மின்னல் மீட்பு நடவடிக்கை. அமெரிக்க அதிபர் துடிப்பானவர். எதையும் விட்டுக்கொடுக்காமல் செயற்படும் மனோபாவம் மிக்கவர்.

கொஞ்சம் இளைஞரும் கூட. பிறகென்ன. அமெரிக்க அதிபர் ஒபாமா மிகவும் சுறுசுறுப்பாக இயங்கினார். பின் லாதின் மீதான ஒப்பரேஷன் “Geronimo” (Operation Neptune Spear) பின் இன்னொரு ரெஸ்க்கியூ ஒப்பரேஷனை அவர் நேரடியாக பார்க்க இருந்தார். மிஷனை லோஞ் பண்ண கையெழுத்திட்டிருந்தார். யெமனின் அதிபரிடம் தங்கள் தாக்குதலை அந்நாட்டு மண்ணில் நிகழ்த்துவதற்கான முழு அனுமதியையும் வாங்கியிருந்தார்.

யெமனிய அரசு “நீங்கள் எதை சொன்னாலும் அதைச் செய்யவும் எதைக் கேட்டாலும் அதைத் தரவும் எந்த நேரமும் நாங்கள் தயார் என்றது. அமெரிக்க பாஷையில் சொன்னால் புல் சப்போர்ட். Hoothi மிலீஷியா ஷியாக்களின் அச்சத்தில் இருக்கும் யெமனிய அரசு, இந்த நேரத்தில் அமெரிக்க மீட்பரை புறந்தள்ளுமா என்ன?

72 மணி நேர காலக்கெடுவை போராளிகள் விதிப்பதற்கு சில மணி நேரங்களிற்கு முன்னரே சீ.ஐ.எ.யிற்கு போராளிகள் 03 நாள் தவணை விதிக்கப்போகிறார்கள் என்ற செய்தியும், பிணைக்கைதிகளை எங்கு வைத்துள்ளனர் என்ற தகவலும் வந்தடைந்து விட்டது. அதனை அது மேலிடத்திற்கு ரிப்போர்ட் செய்தும் இருந்தது. காலம் மிகச் சுருக்கமானது. இன்ஸ்டன்ட் பிளேன் தேவை.U.S. Navy Special Warfare Development Unit (SEAL Team) திட்டத்தை துரிதமாக தயார்படுத்தியது. அமெரிக்க தளபதி Gen. Martin E. Dempsey (சேர்மன் ஒப் தி ஜோயின்ட் சீஃப் ஸ்டாப்ஸ்)

இது பற்றி தாக்குதல் நடப்பதற்கு முன் ஒரு வார்த்தை கூறியிருந்தார். “மிருகத்தனமான, மனிதாபிமானம் இல்லாத கொலை வெறியர் கூட்டமான AQAP மற்றும் Islamic State of Iraq and the Levant போன்றவற்றின் மிருகத்தனமான செயல்களிற்கு நாம் சரியான தண்டனையை வழங்குவோம். கடத்தப்பட்ட எமது பிரஜைகள் எங்குள்ளனர் என்பதனை கண்டறிந்து அவர்களை மீட்போம். இனிமேல் அமெரிக்கர்களிற்கு அச்சுறுத்தல் விடுக்கும் எதையும் விட்டு வைக்கவும் மாட்டோம்”. என.

தென்-யெமனின் Shabwah governate-ல் உள்ள இலக்கு துல்லியமாக உறுதி செய்யப்பட்ட நிலையில், நேவீ சீல் அணியினர் தரையிறக்கப்பட்டனர். அவர்களது லேண்டிங் சோனில் இருந்து தாக்குதல் இலக்கை அடைய இருந்த இடைவெளி 07 மைல்கள். தாக்குதலிற்கான நேரம் யெமன் கணக்குப்படி நடுநிசி 01.00 மணி.

வொஷிங்டன் நேரப்படி வெள்ளிக்கிழமை மாலை 05.00 மணி. ஏழு மைல் தொலைவையும் கால் நடையாகச் சென்று அல்-காயிதா போராளிகளின் கொம்பொளன்ட் சுவரிற்கு 300 மீட்டர் தொலைவில் கவர் எடுத்தனர் அமெரிக்க சிறப்பு படையினர். பொசிஸனில் இருந்து சாதாரணமாக ஐ வியூ 400 மீட்டர்கள் தான் துல்லியமாக இருக்கும். இவ்வளவு ரிஸ்க் அவர்கள் எடுத்ததற்கு காரணம் எதிரிகள் தங்கள் நகர்வை அறிந்து கொண்டு கைதிகளை கொன்று விடக்கூடாது என்பதற்காகவே. அதற்காகத்தான் அந்த 7 மைல் நடை. ஆனால் எதிர்பார்த்தது போல எல்லாம் எப்போதும் நிகழ்வதில்லை.

இங்கேயும் அதே கதைதான். நேவீ சீல் அணியினர் அவர்கள் பாணியில் அட்டாக்கை ஆரம்பித்து வேகமாக வீட்டினுள் உள்நுழைவதற்குள், போராளிகள் அமெரிக்கர்களின் வருகையை உணர்ந்து விட்டனர். அவர்களிற்கு வழங்கப்பட்டிருந்த அவுட்-ஸ்டேன்டிங் கொமான்டை தாமதமின்றி இம்பிலிமென்ட் பண்ணினர். கைதிகளை சுட்டுத் தள்ளி விட்டனர். சீல் டீமினால் துப்பாக்கி சண்டையிட்டு 06 போராளிகளை மட்டுமே கொல்ல முடிந்திருந்தது. பணயம் வைக்கப்பட்டிருந்த இருவர் உடல்களையும் சுமந்து கொண்டு பாதுகாப்பாக தளம் திரும்பியது அமெரிக்க அணி.

இந்த தாக்குதலிற்காக அமெரிக்கா நிறையவே தயார் செய்திருந்தது. அப்பாச்சி ஹெலிகள், ஸ்டெல்த் விமானம், ஒரு கப்பல் என. இந்த மீட்பு நடவடிக்கையில் கொல்லப்பட்டவர்கள் அமெரிக்க ஊடகவியளாலர் Luke Somers (போட்டோ ஜேர்னலிஸ்ட்) மற்றும் தென்ஆபிரிக்க ஆசிரியர் Pierre Korkie. ரெஸ்கியூ விமானத்தில் வைத்து தென்னாபிரிக்கரின் உயிர் பிரிந்தது. USS Makin Island அமெரிக்க கடற்படை கப்பலிற்கு கொண்டு செல்லப்பட்ட அமெரிக்க ஊடகவியளாலரிற்கு உடனடி அறுவை சிகிச்சை செய்யப்பட்ட போதும் பலன் எதுவும் கிடைக்கவில்லை. இந்த ஒப்பரேஷனில் பங்கேற்ற 40 நேவீ சீல் வீரர்களும் இழப்புக்கள் எதுவும் இன்றி திரும்பியிருந்தனர். சிரியாவில் இஸ்லாமிய போராளிகளினால் தடுத்து வைக்கப்பட்டிருந்த அமெரிக்க ஊடகவியளாலர்களான James Foley மற்றும் Steven Sotloff என்போரை மீட்க ஒரு ஒப்பரேஷன் தயார் செய்யப்பட்டு மீட்பு அணி இலக்கை அடைவதற்கு முன்பே போராளிகள் அவர்களின் இடத்தை மாற்றி வி்ட்டனர். அதன் பின்னரே அவர்கள் அந்த இரண்டு ஊடகவியளாலர்களையும் படுகொலை செய்திருந்தனர்.

அதன் பின்னர் al-Qaida in the Arabian Peninsula (AQAP) வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தது. அதில் அவர்கள் “ஓ அமெரிக்கா இது போன்ற முட்டாள்தனத்தை மீண்டும் செய்யாதீர்கள். விளைவு விபரீதமாகும்”என்று எச்சரித்திருந்தனர். இப்போது அதை நடாத்திக்காட்டியிருக்கிறார்கள். “சம்மந்தப்படாத அப்பாவிகளை இந்த போராளிகள் கொலை செய்திருப்பார்கள் என்றால் அதனை ஒரு முஸ்லிமாக இருந்து ஒரு போதும் அங்கீகரிக்கவோ, அனுமதிக்கவோ முடியாது. இஸ்லாம் இதற்கு இடமளிக்கவில்லை.

ஜெனரல் டெம்ப்ஸி கூறியது போல மனித மிருகங்களின் வெறிச்செயல் என்பதில் வேறு கருத்தில்லை. ஆனால் யாராவது உளவாளிகளாகவோ அல்லது இன்போர்மர்களாகவோ செயற்பட்டு அதனால் கைதாகி கொல்லப்பட்டிருந்தால் அதற்கு இஸ்லாமிய ஷரீஃஆ என்ன சொல்கிறதோ அதை செய்வதில் தவறு காணவும் முடியாது.” I.G.I.-2 எனும் கொம்பியூட்டர் கேமில் பிறீ போயினை மீட்க செல்லும் சிறப்பு வீரர் John லிபியாவின் ஒரு மாளிகையினுள் நுழைந்து இலக்குகளை அழித்து முன்னேறும் போது சற்று துப்பாக்கி சமர் நீடித்தாலும் லிபிய வீரர்கள், தங்களை எதிரி நெருங்கி விட்டான் என்பதனை உணர்ந்து ப்றீ-போயினை கொன்று விடுவார்கள். உடனே “அபோர்ட் தி மிஷன் ஜோன்” எனும் செய்தி வரும். அவர் திரும்பி வந்து விடுவார்.

ஏறத்தாழ அது போன்ற ஒரு தாக்குதல் நிகழ்வே நேற்று நடந்த யெமனிய ஒப்பரேஷன். இப்போதெல்லாம் தீவிரவாதிகள் சிகரட் புகைத்து கொண்டு பூனைக்குட்டியை தடவிக் கொண்டு இருப்பதில்லை இரவில். ஈஸியாக ரெஸ்கியூ பண்ண. அவர்களும் நிறைய இங்லிஷ் படம் பார்க்கிறார்கள் போல. அது தான் அமெரிக்கா தோற்றுப் போனதோ..!!

thanks to : http://khaibarthalam.blogspot.in/

About admin_igc_Javith

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Scroll To Top