Home / ஜனாஸா / இஸ்லாத்தின் பெயரால் பொய்யை பரப்பாதீர்கள்

இஸ்லாத்தின் பெயரால் பொய்யை பரப்பாதீர்கள்

இஸ்லாத்தின் பெயரால் பொய்யை பரப்பாதீர்கள்

மண்ணறையும் இஸ்லாமும்:
________________________________

ஒருவர் இறந்து விட்டால் அவரின் மன்னரை வாழ்வு
அதை தொடர்ந்து ஆரம்பித்து விடும் இறந்தவர்
நல்லவராக இருந்தால் அவருடைய கபுறு
பிரகாசமாகவும் ஆரோக்கியமானதாகவும் அமையும்
அதே வேலை இறந்தவர் கெட்டவர் என்றால்
அவரின் மன்னரை இருள் சூழ்ந்ததாகவும் படு
மோசமாகவும் அமையும் இவை இரண்டும் உலகில்
நாம் செய்கின்ற விடயங்களை பொறுத்தே உள்ளது
இதில் யாரின் மன்னரை எப்படியா பட்டது?
என்று அறியும் அறிவை அல்லாஹ் மனிதர்களுக்கு
தர வில்லை கபுருடைய வாழ்வை பற்றி
கூறும் போது அல்லாஹ் இவ்வாறு கூறுகின்றான்

لَعَلِّي أَعْمَلُ صَالِحًا فِيمَا تَرَكْتُ ۚ كَلَّا ۚ إِنَّهَا كَلِمَةٌ هُوَ قَائِلُهَا ۖ وَمِن وَرَائِهِم بَرْزَخٌ إِلَىٰ يَوْمِ يُبْعَثُونَ

23:100. “நான் விட்டுவந்ததில் நல்ல காரியங்களைச் செய்வதற்காக” (என்றும் கூறுவான்). அவ்வாறில்லை! அவன் கூறுவது வெறும் வார்த்தையே(யன்றி வேறில்லை) அவர்கள் எழுப்பப்படும் நாள்வரையும் அவர்கள் முன்னே ஒரு திரையிருக்கிறது.

மரணிதொருக்கும் நமக்கும் மத்தில் بَرْزَخٌ எனப்படும்
ஓர் திரை போடப்படும் இத்திரியை தாண்டி நம்மால்
மண்ணறையில் நடப்பவை எதையும் அறிய முடியாது

கபுருடைய வாழ்வு எப்போது ஆராம்பிக்கும்??
_________________________________________

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:

ஓர் அடியான் கப்ரில் அடக்கம் செய்யப்பட்டு அவனுடைய தோழர்கள் திரும்பிச் செல்லும்போது, அவன் அவர்களின் செருப்பின் ஓசையைச் செவியேற்பான். அப்போது இரண்டு வானவர்கள் அவனிடம் வந்து அவனை எழுப்பி உட்கார வைத்து, ‘இந்த மனிதரைப் பற்றி என்ன கருதிக் கொண்டிருந்தாய்?’ என்று முஹம்மத்(ஸல்) குறித்துக் கேட்பர். அவன் இறைநம்பிக்கையாளனாக இருந்தால் ‘இவர் அல்லாஹ்வின் அடியாரும் தூதருமாவார் என நான் சாட்சி கூறுகிறேன்’ எனக் கூறுவான். அவனிடம் (நீ கெட்டவனாய் இருந்திருந்தால் உனக்குக் கிடைக்கவிருந்த) நரகத்திலுள்ள உன்னுடைய இருப்பிடத்தைப் பார். (நீ நல்லவனாக இருப்பதால்) அல்லாஹ் இதை மாற்றி உனக்குச் சொர்க்கத்தில் இருப்பிடத்தை ஏற்படுத்தியுள்ளான் எனக் கூறப்படும். இரண்டையும் அவன் ஒரே நேரத்தில் பார்ப்பான்…”அவனுக்கு மண்ணறை விசாலமாக்கப்படும்” என்றும் இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் என இதன் அறிவிப்பாளரான கதாதா குறிப்பிடுகிறார்…
நயவஞ்சகனாகவோ நிராகரிப்பவனாகவோ இருந்தால் ‘இந்த மனிதர் விஷயத்தில் நீ என்ன கருதிக் கொண்டிருந்தாய்?’ என அவனிடம் கேட்கப்படும்போது ‘எனக்கொன்றும் தெரியாது; மக்கள் சொல்லிக் கொண்டிருந்ததையே நானும் சொல்லிக் கொண்டிருந்தேன்’ எனக் கூறுவான். உடனே ‘நீ அறிந்திருக்கவுமில்லை: (குர்ஆனை) ஓதி (விளங்கி)யதுமில்லை” என்று கூறப்படும். மேலும் இரும்பு சுத்திகளால் அவன் கடுமையாக அடிக்கப்படுவான். அப்போது அவனை அடுத்திருக்கும் மனிதர்களையும் ஜின்களையும் தவிர மற்ற அனைத்துமே செவியுறும் அளவுக்கு அவன் அலறுவான்.”
அனஸ் இப்னு மாலிக்(ரலி) அறிவித்தார். 1374 புகாரி

*இந்த நபிமொழியில் தெளிவாகவே உள்ளது ஓர் ஜனாஸாவை அடக்கம் செய்து விட்டு மக்கள் திரும்பும் வேலைதான் மன்னரை வாழ்வு ஆரம்பம் என்று விடயம் இவ்வாறு இருக்கும் போது குறித்த பெண்ணின் ஜனாஸா அடக்கப்பட முன் அடக்கும் வேலை நடைபெறும் போது ஏற்படும் நல்ல நிகழ்வோ கொடூர நிகழ்வோ அது மன்னரை நிகழவில்லை

*மண்ணறையில் நடக்கும் வேதனையையோ நல்ல வற்றையோ மனிதர்களாலும் ஜின்களாலும் உணர முடியாது எனும் ஓர் அடிப்படையையும் நபிகளார் இந்த நபிமொழியில் நமக்கு கற்று தர்கின்ரர்கள் .

நடந்தது என்ன???
__________________________________________

மார்பக புற்று நோயால் இறந்த பெண்மணியை கப்ரில் புதைக்கும்போது மாலை வேளையாக இருக்கிறது. இந்த சமயத்தில் சூரியனின் வெளிச்சம் கப்ரில் தடுப்பு ஏற்படுத்தும்போது அந்த தடுப்பில் பட்டு அது எதிரொலிக்கிறது. இதனை யாரோ ஒருவர் தற்செயலாக படம் பிடித்துள்ளார். இதைப் பார்க்கும்போது கப்ரில் வெளிச்சம் உண்டாகிறது என்று யாரோ சிலர் பொய் பிரச்சாரம் பரப்பிக் கொண்டிருக்கின்றனர். இஸ்லாத்தில் இதுபோன்ற செயல்கள் வண்மையாக கண்டிக்கத்தக்கதே. அல்லாஹ் எதை நாடுகிறானோ அதுதான் நடைபெறும். இந்தப் புகைப்படங்களை பார்க்கும்போதே சூரிய வெளிச்சம் அந்தத் தடுப்பின் மீது பட்டு அது கப்ரில் எதிரொலிப்பது நன்றாகத் தெரிகிறது. இதனை அறியாமல் அறிவிலித்தனமாக யாரோ பொய் பிரச்சாரம் செய்துள்ளனர்.
அல்லாஹ் மிக அறிந்தவன்

இத்தகவலை பரப்பியோருக்கு:
______________________________________________

இஸ்லாத்தின் பெயரால் பொய்யை பரப்பாதீர்கள்
பொய்யளவில் தேவையுடைய மார்க்கம் இஸ்லாமில்லை

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
ஒருவர் தாம் கேள்விப்பட்டதையெல்லாம் (பிறருக்கு) அறிவிப்பதே அவர் பொய்யர் என்பதற்குப் போது(மான சான்றாகு)ம்.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
{முஸ்லிம்}
Courtesy; Sathya Kural

About

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Scroll To Top