Home / igc / பிளப்பது எது? பிணைப்பது எது?

பிளப்பது எது? பிணைப்பது எது?

பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்

பிளப்பது எது? பிணைப்பது எது?
நல்ல உள்ளம் கொண்ட மனிதர்களே, அமைதி உள்ள வீட்டையும் நாட்டையும் உலகையும் உருவாக்குகின்றார்கள். இவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்பவே ஒரு சமூகத்தில் அமைதி நிலவும். பொருள் வெறி, பகை, பதவி வெறி, புகழ் வெறி, ஆணவம், பொறாமை, ஆதிக்க உணர்வு, மாச்சரியம் கொண்டவர்கள் பெருகி இருப்பதே சமூக அமைதி குலைவதற்கு முக்கியக் காரணம் ஆகும்.

மேலோட்டமாகப் பார்த்தால் கருத்து வேறுபாடுகள், கலாசார வேறுவாடுகள், மொழி இன வேறுபாடுகள் ஆகியவையே மோதலுக்குக் காரணம் போல் தோற்றமளிக்கின்றது. உண்மை அதுவாயின், ஒரே மதத்தைச் சேர்ந்தவர்கள் தங்களுக்குள் மோதிக் கொள்வதேன்? நாத்திகக் குழுக்கள் தங்களுக்குள் மோதிக் கொள்வதேன்? பொதுவுடமை சிந்தனையாளர்கள் தங்களுக்குள் மோதிக் கொள்வதேன்?

‘சங்க காலத்தில் 101 போர்கள் நிகழ்ந்ததாக சான்றுகள் இருக்கின்றன. அந்த 101 போர்களில் 2 போர்கள் கடம்பரோடு செய்தவை. ஒரு போர் ஆரியருடன் செய்தது. மீதியுள்ள 98 போர்கள் தமிழர்கள் அவர்களுக்குள் செய்து கொண்டவை’ என்கிறார் கவிஞர் வைரமுத்து.
ஆதிக்கம் செலுத்துவதற்கு மனிதன் பல்வேறு வழிமுறைகளைக் கையாளுகின்றான். புதவி, பணம், படை, மக்களின் எண்ணிக்கை ஆகியவை ஆதிக்கம் செலுத்துவதற்கான கருவிகளாகப் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன. இந்த வரிசையில் மதம், மொழி, கலாசாரம் ஆகியவையும் சேர்க்கப்பட்டுள்ளன.
மதத்தை வெவ்வேறு வழிகளில் ஆதிக்கம் செலுத்துவதற்கு ஓர் ஆயுதமாகப் பயன்படுத்தியுள்ளார்கள் ஆதிக்ககாரர்கள். பிறப்பின் அடிப்படையில் பேதங்களைக் கற்பித்து இது ஆண்டவனின் ஏற்பாடு என்று சொல்லி நம்ப வைப்பது.
மனிதர்களில் சில பிரிவினரை கடவுளுக்கு நெருக்கமானவர்கள் என்று கூறி உயர்த்திக் காட்டுவது.
கடவுளால் தேர்ந்தெடுக்கப்பட்ட சமூகம் – (ஊhழளநn Pநழிடந) எனத் தங்களை அழைத்துக் கொண்டு ஆதிக்கம் செலுத்துவது.
அரசர்கள் கடவுளின் அவதாரங்கள் என்று கூறி மக்களை ஏமாற்றுவது. இப்படிப் பல வகைகளில் ஆதிக்கம் செலுத்த மதம் மனிதனுக்கு பயன்பட்டிருக்கிறது. எனவே, மோதல்களுக்கும் பிளவுகளுக்கும் காரணம் கருத்து வேறுபாடுகளோ, கலாசார வேறுபாடுகளோ அல்ல. மாறாக, மனிதனின் தீய எண்ணங்களே அவற்றை உருவாக்கி உள்ளன. இக்கருத்தை குர்ஆன் அழகுபட விவரிக்கிறது.
‘தொடக்கத்தில் மக்கள் அனைவரும் ஒரே கொள்கைவழி நடக்கும் சமுதாயத்தவர்களாகவே இருந்தனர். பின்னர் (இந்நிலை நீடிக்கவில்லை. அவர்களிடையே கருத்து வேறுபாடுகளும் பிணக்குகளும் தோன்றவே நேர்வழியில் செல்வோருக்கு) நற்செய்தி அறிவிப்போராகவும் தீய வழியில் செல்வோருக்கு எச்சரிக்கை செய்வோராகவும் இறைவன் நபிமார்களை அனுப்பிவைத்தான். மேலும், மக்கள் கருத்து Nறுபாடு கொண்ட விஷயங்களில் அவர்களிடடையே தீர்ப்பு வழங்க வேண்டும் என்பதற்காக சத்திய வேதங்களையும் அந்த நபிமார்களையும் இறைவன் அருளினான். ஆனால், இந்த வேற்றுமைகள் தோன்றியது மக்களுக்கு சத்தியம் இன்னதென்று வெளிப்படுத்தப்படாததினால் அல்ல, மாறாக, எவர்களுக்கு சத்தியத்தைப் பற்றி அறிவு வழங்கப்பட்டதோ அவர்கள்தாம் வேற்றுமையைத் தோற்று வித்தனர். தம்மிடம் தெளிவான வழிகாட்டுதல் வந்துவிட்ட பின்னரும் ஒருவன் மீது ஒருவர் அக்கிரமம் புரியும் பொருட்டு வேற்றுமைகளைத் தோற்றுவித்தனர். (அல்பகரா: 2:213)
மக்களுக்கிடையில் நிலவி வந்த கருத்து வேறுபாடுகளை நபிமார்கள் அகற்றிய பின்னரும் மக்கள் மோதிக் கொண்டனர். ஒருவர் மீது ஒருவர் அக்கிரமம் புரியும் பொருட்டு, வேற்றுமைகளை தோற்றுவித்தனர் எனும் இறைவசனம் கூர்ந்து கவனிக்கத் தக்கது.
ஆதிக்க உணர்வு சமூக அநீதிகளுக்கு அடிப்படை. இந்த ஆதிக்க நோய்க்கு அருமருந்து அன்பும், நீதியும்.
மனித நேயமும், நீதியும் உள்ள ஒரு சமூகத்தில்தான் அமைதி தவழ முடியும். இவ்விரண்டும் இணைந்தே வரவேண்டும். சிலர் சமூக நீதி பற்றி பேசுகின்றார்கள். தங்கள் பிரிவினர்களுக்கு கிடைக்க வேண்டிய உரிமைக்காக குரல் கொடுக்கின்றனர். ஆனால், மனித நேயத்தை மறந்துவிடுகின்றனர். இன வெறுப்பு உணர்வுகள் அவர்களிடமிருந்து வெளிப்படுகின்றன. நம்மை ஒரு காலத்தில் நசுக்கியவர்களை நமக்கு வாய்ப்புக் கிட்டினால் நசுக்கிட வேண்டும் என்ற வெறி உணர்வு அவர்களிடம் காணப்படுகின்றது.
இந்த அணுகுமுறை பழிவாங்கும் உணர்வை வளர்த்து பிரச்னைகளை மேலும் சிக்கலாக்குமே தவிர அமைதிக்கு வழிவகுக்காது. நீதிக்கான போராட்டத்தில் மனித நேயத்தை இழந்துவிடக் கூடாது.
நபி (ஸல்) அவர்கள் இஸ்லாமியப் பணியைத் தொடங்கிய காலத்தில் சமூகம், அரசியல், பொருளியல், ஆன்மிகம் ஆகிய அனைத்துத் துறைகளிலும் அடக்குமுறைகள், சுரண்டல்கள், அநீதிகள் ஆகியன கட்டவிழ்த்து விடப்பட்டிருந்தன. ஜாதிக் கொடுமை, பெண்களுக்கு எதிரான அநீதிகள், குலச் சண்டைகள், பாலியல் வன்முறைகள், வழிப்பறி, வட்டி, சூது. மது ஆகியவை அன்றைய மக்களின் வாழ்க்கை முறையாக இருந்தன. இவை அனைத்திற்கும் எதிராக குரல் கொடுத்தார்கள் நபிகள் நாயகம் அவர்கள்.
‘இவர் (முஹம்மது) நன்மை செய்யுமாறு மக்களை ஏவுகின்றார். தீமைகளிலிருந்து அவர்களைத் தடுக்கின்றார். மேலும், அவர்களுக்கு தூய்மையானவற்றை ஆகுமாக்குகின்றார். தூய்மை இல்லாதவற்றை தடை செய்கின்றார். அவர்கள் மீதுள்ள சுமையை இறக்கிவிடுகின்றார். அவர்களைப் பிணைத்திருந்த விலங்குகளை உடைத்தெறிகிறார்’ (அல்அஃராஃப் 7:157) என்ற இறைவசனம் நபியவர்கள் செய்த பணியை நமக்கு எடுத்துரைக்கிறது.
தீமைகளுக்கும் அநீதிகளுக்கும் எதிராக நடத்தப்பட்ட இந்தப் போராட்டத்தில் மனித நேயம் எவ்வகையிலும் பாதிக்கப்படாமல் நபியவர்கள் பார்த்துக் கொண்டார்கள். துவேஷம் துளியும் கலக்காத புரட்சி நபகள் நாயகம் நடத்திய புரட்சியாகும். சில வேளைகளில் அநீதிக்கு எதிராக பலம் (குழசஉந) பயன்படுத்தப்பட்டு போர்களும் நிகழ்த்தப்பட்டன. ஆனால், இன வெறுப்பு, துவேஷம், பழிக்குப் பழி ஆகிய உணர்வுகளுக்கு ஒருபோதும் இடம் அளிக்கப்படவில்லை. மாறாக, உள்ளங்களை இணைப்பதிலேயே கவனம் செலுத்தப்பட்டது. நபிகள் நாயகத்தின் காலத்தில் பிறப்பு, குலம், கோத்திரம் எனும் அடிப்படையில் மோதிக் கொண்டிருந்த மக்களை அன்பினால் இணைத்த நிகழ்ச்சியை குர்ஆன் கீழ்வருமாறு குறிப்பிடுகிறது.
‘இறைநம்பிக்கை கொண்டவர்களே! இறைவன் உங்கள் மீது பொழிந்த அருட்கொடைகளை நினைத்துப் பாருங்கள். நீங்கள் ஒருவருக்கொருவர் பகைவர்களாக இருந்த நேரத்தில், அவன் உங்களுக்கிடையே உளப்பூர்வமான இணக்கத்தை ஏற்படுத்தினான். எனவே, அவனது அருளால் நீங்கள் சகோதரர்களாகி விட்டீர்கள். நீங்கள் நெருப்புப் படுகுழியின் விளிம்பில் நின்று கொண்டிருந்தீர்கள். இறைவன் உங்களை அதிலிருந்து காப்பாற்றிவிட்டான்’ (ஆலுஇம்ரான்: 3:103)
எனவே, நீதிக்கான போராட்டம் மனித நேயத்தின் அடிப்படையில் நிகழ்த்தப்பட வேண்டும். அதேசமயம், மனித நேயம் பற்றி உரத்தக் குரலில் உச்சரிப்போர் நீதிக்கான போராடட்டத்திலும் குதிக்க வேண்டும். நீதி மறுக்கப்பட்ட சமூகத்தில் அன்பைப் பற்றி பேசுவது, பசித்தவனிடம் தத்துவம் பேசுவதற்கு ஒப்பானதாகும். அது பாதிக்கப்பட்டவர்களின் ஆத்திரத்தைக் கிளப்புமே தவிர அமைதியைத் தராது. எனவே, இஸ்லாம் அன்பையும் போதிக்கின்றது. நீதிக்காகவும் குரல் கொடுக்கின்றது.
ஆக்கம்: டாக்டர் கே.வி.எஸ். ஹபீப் முஹம்மது.

 

About

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Scroll To Top